கடுகு எண்ணெய் சமையலுக்கு உகந்ததா? அதனால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா???

Author: Hemalatha Ramkumar
16 செப்டம்பர் 2024, 6:07 மணி
Quick Share

கடுகு எண்ணெய் என்பது உலகெங்கும் உள்ள பல்வேறு உணவு முறைகளில் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணெய் கடுகு விதைகளை அழுத்துவதன் மூலமாக பெறப்படுகிறது. இதில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்ற நல்ல கொழுப்புகள் இருப்பதால் இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது. கடுகு எண்ணெய் சருமம் மற்றும் தலைமுடிக்கு பல்வேறு பலன்களை அளிக்கிறது. அது மட்டுமல்லாமல் இது நாள்பட்ட வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. மேலும் இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது மற்றும் சளியில் இருந்து நிவாரணம் பெறுவதற்கும் உதவுகிறது. ஆனால் கடுகு எண்ணெயில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் இதனை ஒருவர் அளவோடு சாப்பிட வேண்டும். இல்லையெனில் அதனால் பக்க விளைவுகள் ஏற்படும். இப்போது பல்வேறு பலன்களின் களஞ்சியமாக திகழும் கடுகு எண்ணெயில் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

சருமத்திற்கு நல்லது 

கடுகு எண்ணெயில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இது சரும ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது. இதில் உள்ள பண்புகள் வறண்ட சருமத்திற்கு நீர்ச்சத்து அளித்து பிக்மென்டேஷன் பிரச்சனையை போக்கி சருமத்தின் தொனியை மேம்படுத்துகிறது. மேலும் முகப்பரு மற்றும் சன்பர்ன் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் இதனை வழக்கமான முறையில் பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை பெறலாம். 

தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது 

கடுகு எண்ணெயில் தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான பண்புகள் உள்ளது. கடுகு எண்ணெயில் காணப்படும் அதிக அளவு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ தலைமுடிக்கு போஷாக்கு மற்றும் நீர்ச்சத்தை வழங்க வல்லது. கடுகு எண்ணெயை மயிர்கால்களில் மசாஜ் செய்து வந்தால் அது தலைமுடியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதனை வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. 

வலியை குறைக்கிறது 

கடுகு எண்ணெயில் வீக்க எதிர்ப்பு பண்புகள் இருக்கும் காரணத்தால் இது தசைகள் மற்றும் மூட்டுகளில் உள்ள வலியை போக்குகிறது. மேலும் நாள்பட்ட வீக்கத்தின் காரணமாக ஏற்படும் ருமட்டாய்ட் ஆர்த்தரைட்டிஸ் போன்ற நிலைகளுக்கு கடுகு எண்ணெய் சிறந்த மருந்தாக அமைகிறது. அது மட்டுமல்லாமல் உடல் வலியை போக்குவதற்கு இது பாரம்பரிய ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

புற்றுநோய் வளர்ச்சியை குறைக்கிறது 

கடுகு எண்ணெய் ஒரு சில வகையான புற்றுநோய் வளர்ச்சியையும் அது பரவுவதையும் தவிர்க்கிறது என்பது ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கடுகு எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் உடலில் புற்றுநோய் ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்களை நடுநிலையாக்கி புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. 

இதய ஆரோக்கியத்திற்கு ஆதரவு வழங்குகிறது 

கடுகு எண்ணெயில் மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் போன்ற நல்ல கொழுப்புகள் இருப்பதால் இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதன் காரணமாக இதய நோய் ஏற்படும் அபாயங்கள் குறைகிறது. 

சளி மற்றும் காய்ச்சலுக்கு நல்லது 

சளி, இருமல் மற்றும் பிற சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய் இயற்கையான தீர்வாக அமைகிறது. இந்த எண்ணெய் அடைப்பட்ட நாசி பாதைகளை விடுவித்து நிவாரணம் அளிக்கிறது. கடுகு எண்ணெயில் சிறிதளவு பூண்டு சேர்த்து நெஞ்சு பகுதி மற்றும் மூக்கின் கீழ் தடவி வர மூக்கடைப்புலிருந்து நிவாரணம் பெறலாம். மேலும் கடுகு எண்ணெயை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீராவியை சுவாசிக்கும் பொழுது சளி கரைந்து விடும். 

கடுகு எண்ணெயில் ஏராளமான நன்மைகள் கிடைத்தாலும் அதனை தவறான முறையில் பயன்படுத்தினால் அது சில பக்க விளைவுகளை உண்டாக்கும். சென்சிடிவ் சருமம் இருப்பவர்கள் கடுகு எண்ணெயை பயன்படுத்தினால் சரும எரிச்சல், சிவத்தல், அரிப்பு, தடிப்பு போன்றவை ஏற்படும். ஒரு சிலருக்கு கடுகு எண்ணெய் அலர்ஜியை ஏற்படுத்தலாம். கடுகு எண்ணெயை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் செரிமான பிரச்சனைகளை உருவாக்கலாம். கடுகு எண்ணெயை கண்களுக்கு அருகில் கொண்டு வர கூடாது. ஏனெனில் அது கண்களில் எரிச்சல், சிவத்தல் மற்றும் அசௌகரியத்தை உண்டாக்கும்.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 137

    0

    0