நீண்ட ஆயுளோடு ஹெல்தியா இருக்க தினமும் 30 நிமிடங்கள் செலவு செய்தால் போதும்!!!

Author: Hemalatha Ramkumar
17 செப்டம்பர் 2024, 11:44 காலை
Quick Share

பெரும்பாலான நபர்களுக்கு நடைபயிற்சி என்பது ஒரு உடற்பயிற்சி மற்றும் கார்டியோ வொர்க்அவுட்டின் ஒரு வடிவம் என்பது தெரிவதில்லை. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான தீவிரம் கொண்ட ஏரோபிக் பயிற்சி செய்ய பரிந்துரை செய்கிறது. ஒரு வாரத்திற்கு ஐந்து நாட்கள் விறுவிறுப்பாக 30 நடப்பது பலனளிக்கும். உங்களை ஆக்டிவாக வைக்கவும் பல்வேறு விதமான நோய்களிலிருந்தும் காக்கும் நடை பயிற்சியை தினமும் மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள்:- 

இதய ஆரோக்கியம் 

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நடைப்பயிற்சி ஒரு சிறந்த வழி. இது இதயத்தை வலுப்படுத்தி, ரத்த அழுத்தத்தை குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டால் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது. 

உடல் எடையை கட்டுப்படுத்துகிறது நடைபயிற்சி செல்லும் பொழுது நமது உடலில் கலோரிகள் எரிக்கப்படுகிறது. இதனால் உங்களால் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க முடியும். மேலும் இது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து உடலின் அமைப்பை மேம்படுத்துகிறது. 

நல்ல மனநிலைக்கு காரணமாகிறது 

நடைபயிற்சி செல்வது நமது மனநிலையை மேம்படுத்தப்படுகிறது. நடக்கும் பொழுது நமது உடலில் என்டார்பின்கள் என்ற ஹார்மோன்கள் வெளியிடப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் இயற்கையான முறையில் மனநிலையை மேம்படுத்துவதற்கு உதவும். தினமும் மாலை அல்லது காலையில் நேரத்தை ஒதுக்கி நடைபயிற்சி சென்றால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனசோர்வு குறையும். 

வலுவான எலும்புகள் மற்றும் தசைகள் 

நடைப்பயிற்சி என்பது எடை தாங்கும் ஒரு உடற்பயிற்சியாக அமைவதால் இது எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்துகிறது. இதன் காரணமாக ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது. 

நாள்பட்ட நோய்களுக்கான அபாயம் குறைகிறது 

தினமும் நடைப்பயிற்சி செல்வதால் வகை 2 நீரழிவு நோய், ஒரு சில வகையான புற்றுநோய் மற்றும் டிமென்சியா போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகிறது. 

நடைப்பயிற்சியை அன்றாட பழக்கமாக மாற்றிக் கொள்வதற்கு உதவும் ஒரு சில குறிப்புகள்:-

ஒரு துணையை கண்டுபிடிங்கள்: ஒரு நண்பருடன் சேர்ந்து நடைபயிற்சி செல்வது மிகவும் மகிழ்ச்சியாகவும், உங்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அமையும். மனிதர்களோடு சேர்ந்துதான் நீங்கள் நடைபயிற்சி செல்ல வேண்டும் என்பது இல்லை. உங்களுக்கு பிடித்த செல்லப்பிராணிகளை அழைத்து கூட நீங்கள் நடைபயிற்சிக்கு செல்லலாம். 

இயற்கை ததும்பும் வழியை தேர்வு செய்யவும்: ஒரு பூங்கா அல்லது மரங்கள் மற்றும் பூக்கள் பூத்துக் குலுங்கும் இடங்களில் நடைப்பயிற்சி செல்வது உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 

இசை அல்லது பாட்காஸ்ட் கேட்டபடி நடக்கவும்: வெறுமனே நடை பயிற்சி செல்வதை காட்டிலும் இசை அல்லது பாட்காஸ்ட் போன்றவற்றை கேட்டுக் கொண்டே நடப்பது உங்களுக்கு இன்னும் சுவாரசியமாகவும் உங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அமையும். 

இலக்குகளை அமைத்துக் கொள்ளவும்: உங்களுடைய நடைபயிற்சிக்கு ஒரு குறிப்பிட்ட இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள். அதாவது தூரம் அல்லது நேரத்தை அதிகப்படுத்துவது போன்றவற்றை நீங்கள் செய்யலாம். 

உங்களுடைய முன்னேற்றத்தை கண்காணிக்கவும்: ஒரு ஃபிட்னஸ் ட்ராக்கர் அல்லது ஆப் பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் நடக்கும் தூரம், நேரம் மற்றும் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை போன்றவற்றை கண்காணியுங்கள். இது உங்களை ஊக்கப்படுத்துவதற்கும் தொடர்ந்து உங்களுடைய முன்னேற்றத்தை கண்காணிக்கவும் உதவும். 

நடைப்பயிற்சிக்கும் ஆயுளுக்கும் தொடர்பு இருப்பது சம்பந்தமாக இன்னும் பல்வேறு ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. எனினும் தினமும் நடைபயிற்சி செலவ்து நிச்சயமாக உங்களை நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வாழ உதவும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. எனவே நடைபயிற்சியை உங்களுடைய அன்றாட வழக்கத்தில் சேர்த்து உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி மகிழ்ச்சியோடு வாழுங்கள்.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 162

    0

    0