நான் என் ஹீரோவை பற்றி தான் பேசுவேன்… வில்லன்களை பற்றி பேசுவது என் வேலை இல்ல : சூடான சு.வெங்கடேசன் எம்பி!
Author: Udayachandran RadhaKrishnan17 September 2024, 4:26 pm
மதுரை தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலச்செல்லும் மாணவி சுஷ்மிதாவிற்கு எந்தவித பினையும் இல்லாமல் ரூபாய் 40 லட்சம் கல்விக்கடன் வழங்கினர்.
இந்த விழாவில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சுப வெங்கடேசன் மற்றும் வங்கி அதிகாரிகள் ஆகியோர் மாணவிக்கு கல்வி கடனை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்வர்களை ஈர்க்க வேண்டும் என்பது அனைவரது ஆசை.
தமிழ்நாட்டுக்கு வரும் முதலீடுகளை தென் மாவட்டங்களுக்கு வருவதற்கு தமிழக அரசு கூடுதல் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
பெரும்பாலான முதலீடுகள் சென்னை மற்றும் வட மற்றும் மேற்கு மாவட்டங்களில் மட்டும் தான் வருகிறது. தென் மாவட்டங்கள் தொடர்ந்து பின் தங்கியிருக்கிறது.
அதை முறியடிப்பதற்கு முதலீடு செய்ய வருபவர்கள் ஒரு மாநிலத்தில் சமமான வளர்ச்சியை கொண்டு வர விரும்ப மாட்டார்கள் அதை ஒரு அரசு தான் செய்ய வேண்டும்.
தென்மாவட்டத்தில் முதலீடு செய்தால், தொழில்களை துவங்கினால் கூடுதல் முன்னுரிமையும், கூடுதல் சலுகையும் வழங்கி வருகின்ற முதலீடுகளை மதுரையை மையப்படுத்திய முதலீடுகளாக மாற்ற தமிழக முதல்வர் முயற்சி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கொண்டு வந்துள்ள முதலீடுகளை நான் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். வருகின்ற முதலீடுகளில் தென் மாவட்டங்களுக்கு போதுமானதாக இல்லை.
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு கூடுதல் முன்னுரிமை கொடுத்து, தென்மாவட்ட வளர்ச்சிக்கு தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்.
தென் மாவட்டங்களில் வளர்ச்சி மிக மிக தேவையான ஒன்று.! மிகப்பெரிய நிறுவனங்கள் மதுரையை மையப்படுத்திய முதலீட்டை உருவாக்கிய காலமாக இந்த காலம் இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடரில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா அவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பதில் அளித்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிய விவரம் இல்லை.? டெண்டர் விடுவதில் டெக்னிக்கல் எரர் ஆகிவிட்டது என தெரிவித்தார். அதிகாரப்பூர்வமான ஒப்பந்தத்தில் தொழில்நுட்ப பிரச்சனை இருப்பதால் நாங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை என 25 நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சொல்லியிருந்தார்.
மேலும் படிக்க: சீறிய சிறுத்தைகள் சிறுத்துபோய் விட்டது : திருமாவளவன் மீது தமிழிசை காட்டம்.!!
உங்களுடைய டெக்னிக்கல் எரர் எப்ப தான் முடியும்.? எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்கள் மட்டும் டெக்னிக்கல் எரர் வந்து கொண்டே இருக்கிறது.! மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் எத்தனை முறை டெக்னிக்கல் எரர் வரும்.? இது குறித்து பலமுறை கேள்வி எழுப்பினோம் என்றார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது 16 வது நாடாளுமன்றத்தில் தொகுக்கப்பட்ட திட்டம் இது, தற்போது 18 வது நாடாளுமன்றம் இப்போதாவது நிறைவு பெற வேண்டும். நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்றார்.
இந்தியாவே கொண்டாட வேண்டிய ஒரு பிறந்த நாள் என்பது தந்தை பெரியாரின் பிறந்த நாள். நான் என்னுடைய ஹீரோவை தான் பேசுவேன் வில்லன்களை பேசுவது எனக்கு வேலை இல்லை
நான் என்னுடைய கதாநாயகனை கொண்டாடுவேன். தந்தை பெரியார் இந்தியா முழுவதும் எதிரொலிக்க வேண்டிய ஒரு தினம் ஒரு நாள் இது. அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றார்.