மது ஒழிப்பு மாநாடு.. திருமாவளவனை ஏமாற்றும் திமுக : சொல்கிறார் பாஜக பிரமுகர் கே.பி ராமலிங்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2024, 1:28 pm

தர்மபுரி அருகே உள்ள தடங்கம் பகுதியில் தர்மபுரி மாட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுஒழிப்பு மாநாட்டை நடத்த உள்ளார். அதனை பாஜக வரவேற்கிறது. அதே நேரத்தில் இந்த மாநாட்டிற்கு திமுகவை அழைத்தார்களா அல்லது அவர்களாகவே செல்கிறார்களா என தெரியவில்லை.

அப்படி திமுக மாநாட்டில் கலந்துகொண்டால் ஒரு கொப்பரை பாலில் மனித மலத்தை கொட்டுவதற்கு ஒப்பாகும்.காரணம் அந்த மாநாட்டில் திமுக கலந்து கொள்ள அருகதையில்லை.

இவர்கள் ஆட்சியில்தான் ஆயிரக்கணக்கான மதுபான கடைகளை திறந்து வைத்தும் விஷ சாரய விற்பனைகள் இவர்களின் நிர்வாகிகளே செய்கின்றனர்.

இந்த மாநாட்டிற்கு திமுக அழைக்காமலே சென்றால் திருமாவளவனை அவமானபடுத்த போகிறார்கள். திமுகவை அழைத்திருந்தால் திருமாவளவனை ஏமாற்ற போகிறார்கள்.

மேலும் படிக்க: 17 வயது கொளுந்தியாவை மிரட்டி அடிக்கடி உல்லாசம்… கர்ப்பமாக்கிய அக்காவின் கணவரை வளைத்தது போலீஸ்!

பாஜக இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றி எழுத பார்க்கிறது . அப்படி மாற்றி எழுதினால் திமுக போராட்டத்தை வீரியத்துடன் கையிலெடுக்கும் என துரைமுருகன் கூறியுள்ளார்.

அவர் தலைமையில் நற்பெயரை வாங்க அல்லது கட்சியில் தனக்கு உள்ள பிரச்சனையை சரிகட்டி கொள்வதற்க்காக இப்படி பேசுகிறாரா என கருதுகிறோம்.

மத்திய அரசு சுந்திர தின போராட்ட வரலாற்றை எழுதவும் புதுபிக்கவும் புதிய குழுவை அமைத்து இருக்கிறது.இந்த குழு அமைக்கப்பட காரணம் சுதந்திர காலகட்டத்திற்கு பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் சுந்திர போராட்டத்தில் அவர்கள் பங்கு பெற்ற வரலாற்றை மட்டுமே பதிவு செய்துள்ளார்கள்.

பால கங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே. போன்ற வீரர்கள் வரலாறுகள் உண்டு.சமீபத்தில் திருப்பூர் குமரன் வரலாறு பள்ளி பாடதிட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சுப்ரமணிய சிவா தீரன் சின்னமலை ஆகியோரின் வரலாறுகள் கூட நீக்கப்பட்டுள்ளது. அதனை புதுபிக்கவே இந்த குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது என பேட்டியளித்தார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?