மலச்சிக்கல் பிரச்சினை வரவே கூடாதுன்னு நினைச்சா தினமும் இந்த இலையை சாப்பிடுங்க… ஆனா ஒரு கண்டிஷன்!!!
Author: Hemalatha Ramkumar18 September 2024, 3:22 pm
ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் அளிக்கும் ஒரு சக்தி வாய்ந்த மூலிகையாக துளசி அறியப்படுகிறது. அதிலும் துளசி இலைகளை காலை வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது அதனுடைய பலன்கள் இன்னும் பல மடங்காகிறது. துளசி இலைகளில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்து இருப்பதால் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கிறது. இந்த காம்பவுண்டுகள் நமது உடலில் இயற்கை பாதுகாப்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது. தினமும் காலையில் துளசி சாப்பிட்டு வர உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்பட்டு பொதுவாக ஏற்படும் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விலகி இருக்கலாம்.
தினமும் காலை துளசி இலை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
செரிமானத்தை மேம்படுத்துகிறது
வெறும் வயிற்றில் துளசி இலை சாப்பிடுவதால் கிடைக்கும் மிக அற்புதமான பலன்களில் இதுவும் ஒன்று. இது செரிமானத்தில் நேர்மறையான தாக்கத்தை கொண்டுள்ளது. இந்த மூலிகை செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்று உப்புசத்தை குறைத்து, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும் இதில் வீக்க எதிர்ப்பு பண்புகள் காணப்படுவதால் வயிற்றில் உள்ள அசௌகரியத்தை ஆற்றுவதற்கு உதவுகிறது.
சிறந்த அறிவுத்திறன் செயல்பாடு
மன அழுத்தத்தை சமாளிப்பதற்கு துளசி பெரிய அளவில் உதவுகிறது. இதனை வழக்கமான முறையில் நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுடைய நரம்புகள் அமைதிபடுத்தப்பட்டு, பதட்டம் குறைந்து, உங்கள் மனநிலை மேம்படும். துளசி என்பது மனநிலை ஊக்கியாக அமைகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
துளசி இலைகள் நோய் எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் போனவை. துளசியில் காணப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக சண்டையிட்டு உடலின் தொற்றுகளுக்கு எதிராக உடலின் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது. எனவே தினமும் துளசி சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் காய்ச்சல் போன்ற தொற்றுகளில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.
நச்சுகளை அகற்றுகிறது
துளசி இயற்கையான டீடாக்சிஃபையராக செயல்பட்டு உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை அகற்றி உடலை சுத்தம் செய்கிறது. இதனால் இது கல்லீரல் செயல்பாட்டை ஆதரித்து, ஆரோக்கியமான சிறுநீரக ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. உங்களுடைய நாளை துளசியுடன் ஆரம்பிப்பது நிச்சயமாக உங்களுக்கு எதிர்பாராத நன்மைகளை வழங்கும்.
துளசி இலைகளை காலையில் எப்படி சாப்பிட வேண்டும்?
இலைகளை மென்று சாப்பிடுவது: இது மிக பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு முறை. ஒரு சில துளசி இலைகளை காலை வெறும் வயிற்றில் வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். அதன் நன்மைகளை அதிகரிப்பதற்கு இலைகளில் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிடலாம்.
துளசி தேநீர்: ஒரு சில துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேநீராக பருகலாம். இது கரகரப்பான தொண்டைக்கு நிவாரணம் அளித்து, மனதை அமைதிப்படுத்துகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
மலச்சிக்கல் பிரச்சினை வரவே கூடாதுன்னு நினைச்சா தினமும் இந்த இலையை சாப்பிடுங்க… ஆனா ஒரு கண்டிஷன்!!!