மீண்டும் 2019 வருகிறதா? 27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா : அறிகுறிகள் இதுதான்.. அலர்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 செப்டம்பர் 2024, 6:42 மணி
XEC
Quick Share

கடந்த 2019ஆம் ஆண்டு உலக நாடுகளே துவண்டு போக காரணமாக இருந்தது கொரோனா. சீனாவில் கண்டுபிடிக்கப்ப்டட கொரோனா, உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

துவண்டு போன உலக நாடுகள் பொருளாதாரத்தில் சிக்கி தவித்தது. தடுப்பூசிகளை கண்டுபிடித்த உலக நாடுகள் பின்னர் தொற்கை கட்டுக்குள் கொண்டு வந்தது.

பின்னர் அவ்வப்போது கொரோனா புதிய வகை பரவி வந்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இம்முறை எக்ஸ்.இ.சி வேரியண்ட் என்ற உருமாறிய புதிய கொரோனா தொற்று உலக முழுவதும் பரவி வருகிறது.

மேலும் படிக்க: திமுக முன்னாள் அமைச்சர் திடீர் மரணம்.. ஓய்வெடுத்த போது உயிர் பிரிந்தது : அஞ்சலி செலுத்த முதலமைச்சர் வருகை!

ஜெர்மனியில் கடந்த ஜூன் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா மெல்ல மெல்ல இங்கிலாந்து, டென்மார்க், அமெரிக்கா, போலந், நார்வே, சீனா, உக்ரைன், போர்சுகள் உட்பட 27 நாடுகளில் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

இது புதிய அலையை உருவாக்கலாம் என்றும், உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கான அறிகுறிகள், கொரோனா பரவிய போது ஏற்பட்ட காய்ச்சல், தொண்டை வலி, இடைவிடாத இருமல், வாசனை நுகர்வை இழத்தல், உடல் வலி போன்றவைதான் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  • Vijay விஜய் பற்ற வைத்த நெருப்பு : பதறி ஓடி வந்த திமுக.. 75 ஆண்டு திமுக வரலாற்றில் புதுசு!!
  • Views: - 170

    0

    0