கோவையில் கிராம மக்களை அச்சுறுத்திய 12 அடி நீள முதலை சிக்கியது… வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2024, 7:41 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள தடுப்பணை குட்டை ஒன்றில் முதலை நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது. . கடந்த பருவ மழையின் போது பெய்த மழை காரணமாக வனப்பகுதியில் இருந்து முதலை குட்டைக்கு அடித்து வரப்பட்டது தெரியவந்தது.

இதனால்அச்சமடைந்தகிராமமக்கள்இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.. தகவல் கிடைக்கப்பெற்றதும் வனச்சரக அலுவலர் மனோஜ்தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் குட்டையில் முதலையின் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து குட்டையில் இருக்கும் முதலையைப் பிடிக்க வனத்துறையினர் நேற்று தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குட்டையில் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால் உடனடியாக முதலையைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. முதலில் குட்டையில் உள்ள தண்ணீரைவெளியேற்றிய பின்னர் முதலையைப் பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.

நேற்று காலை முதல் மோட்டார் பம்ப் செட்டுகள் மூலம் குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும்பணி தொடங்கியது.

குட்டையில் தண்ணீரின் அளவு அதிகமாகஇருந்ததால் நேற்று காலை தொடங்கப்பட்ட பணி இரவு முழுவதும் விடிய விடியதொடர்ந்துநடைபெற்றது .

முதலை குட்டையை விட்டு வெளியேறாமல் இருக்க குட்டையை சுற்றிலும் நைலான் வலையால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தண்ணீரின் மட்டம் குறைந்ததும் குட்டையில் முதலை இருப்பது தெரியவந்தது உடனே வனத்துறையினர் கயிற்றால் சுருக்கு அமைத்து போராடி முதலையைப்பிடித்தனர்.

வனத்துறையினர் பிடிபட்ட முதலையை பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் விட்டனர்.இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

  • ajith fans released poster on ilaiyaraaja compensation on good bad ugly viral on internet இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…