பெண்ணை கொலை செய்து சடலத்தை வெட்டி சூட்கேஸில் அடைத்த சம்பவம்.. ஆண் நண்பர் கைது : திடுக்கிடும் தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2024, 1:59 pm

சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். குறிப்பாக சூட்கேசில் அதிக அளவில் ரத்தக்கறை இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூட்கேசை மீட்டு திறந்து பார்த்தனர். இதில், பெண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தது.

பெண்ணின் உடலை மீட்ட போலீசார், உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? கொல்லப்பட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்றது.

இதில் அந்த பெண் மணலி பகுதியை சேர்ந்த 31 வயது பெண் என்பதும், அவரது பெயர் தீபா என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலை எங்கு நடந்தது..வேறு ஏதேனும் இடத்தில் கொலை செய்து உடலை கொலையாளிகள் இங்கு கொண்டு வந்து போட்டனரா? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்கள். குறிப்பிட்ட அந்த இடத்தில் சூட்கேசுடன் யாரேனும் சென்றார்களா? என சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க: இளம்பெண் பாலியல் சம்பவத்தில் கோவாவில் தலைமறைவான ஜானி… சுற்றி வைளைத்த போலீஸ்..!!!

அவரிடம் விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இறந்த பெண் காணாமல் போன தீபா என்பதும், கொலை செய்த நபர், அந்த பகுதியில் அவரது அண்ணன் வீட்டில் வசித்து வந்ததும், அண்ணன் குடும்பம் வெளியூர் சென்றதால் தீபாவை அங்கு அழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த பெண்ணை அந்த வீட்டில் கொலை செய்து உடலை வெட்டி சூட்கேசில் வைத்து தூக்கி எறிந்ததும் தெரியவந்துள்ளது. எதற்காக கொலை நடந்தது குறித்து விசாரணையில் தெரியவரும் என கூறப்படுகிறது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 324

    0

    0