எங்க செக் வைக்கணும், எந்த நேரத்தில் திமுகவிடம் பேசணும்னு எங்களுக்கு தெரியும் : சூடான திருமாவளவன்..!!
Author: Udayachandran RadhaKrishnan19 September 2024, 2:30 pm
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மானம்பாடியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொருளாளர் வெண்மணியின் திருமா குடில் புதுமனை விழாவிற்கு வருகை புரிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அவர் கூறியதாவது, கூட்டணியில் எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும்? எந்த கோரிக்கையை வைக்க வேண்டும் என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தெரியும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தெரியும்.
காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும் எனவும், திமுக கூட்டணிக்குள் பேச வேண்டிய அரசியலை திமுக கூட்டணியிக்கு வெளியே இருப்பவர்கள் பேசுவது ஏற்புடையதல்ல எனவும் அது அவர்களை சூது , சூழ்ச்சி நிறைந்த அரசியலை ஆகவே கருதப்படும் எனவும் கூறினார்.
டெல்லியில் இருக்கின்ற கூட்டணியை போல தமிழகத்தில் இருக்கின்ற திமுக ,அதிமுக கட்சிகள் இன்னும் தனித்து ஆட்சி செய்யக்கூடிய ஆதரவை மக்கள் இடத்தில் பெற்றுள்ளார்கள் என எடுத்து கொள்வது தான் என்பது பொருள் எனவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: காதலியை ஊருக்கு அனுப்பிவிட்டு திருமணமான பெண்ணுடன் உல்லாசம்.. ஒரே நேரத்தில் இருவரை காதலித்த வாலிபருக்கு நேர்ந்த சோகம்!
கருணாநிதியின் குடும்பத்தின் அடிமைதான் திமுக என எச் .ராஜா விமர்சனம் செய்துள்ளார் என பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு ,அது அவரின் வயிற்று எரிச்சரால் பேச கூடிய விமர்சனம் எனவும் , அவர்களால் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியவில்லை எனவும் தனித்து அவர்களால் குறிப்பிட்ட வாக்கு வங்கி உருவாக்க முடியவில்லை எனவும் திமுகவோடும் அல்லது அதிமுகவோடும் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை அந்த ஆற்றாமையால் , இயலாமையால் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் புலம்புகிறார்கள் என பதில் அளித்தார்.
பின்பு திருச்சியில் நடைபெறுகின்ற பல்வேறு கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் தொண்டர்களின் ஆரவாரத்துடன் வாகனத்தில் புறப்பட்டு சென்றார்..