மும்பை நடிகையை பாடாய் படுத்திய முன்னாள் அரசு… பாதுகாப்பு கேட்டு அமைச்சரை சந்தித்து மனு!

Author: Udayachandran RadhaKrishnan
19 செப்டம்பர் 2024, 5:50 மணி
Kadambari
Quick Share

தன் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி உள்துறை அமைச்சர் அனிதாவை சந்தித்த மும்பை நடிகை ஜெத்வானி குடும்பத்தினர்

வழக்கு முடியும் வரை விஜயவாடாவில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மும்பை நடிகை மனு

ஆந்திர மாநிலம் அமராவதி தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் தனது பெற்றோர் வழக்கறிஞருடன் மும்பை நடிகை காதம்பரி ஜேத்வானி உள்துறை அமைச்சர் அனிதாவை சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் உனது வழக்கில் ஏற்கனவே மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நினைவூட்டினார். அதற்காக அரசு மற்றும் உள்துறை அமைச்சருக்கு மும்பை நடிகை ஜேத்வானி நன்றி தெரிவித்து கொண்டார்.

மேலும் தன் மீது குக்கலா வித்யாசாகர் தொடர்ந்த சட்டவிரோத பொய் வழக்குகளை ரத்து வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் கேட்டு கொண்டார்.

இந்த வழக்கு முடியும் வரை விஜயவாடாவில் தங்கும் தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு ஜேத்வானி மனு அளித்தார்.

மேலும் படிக்க: அமைச்சர் தொகுதியில் சத்துணவு முட்டை தனியார் உணவகத்துக்கு விற்பனை.. சீல் வைத்த அதிகாரிகள்.. சிக்கிய இருவர்!

இதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர், அரசின் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் தேவையில்லை என்றும், முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அனைவரும் துணை நிற்பார்கள் .

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்கள் நிலைமை மற்றொருவருக்கு உதாரணம் என்று உள்துறை அமைச்சர் அனிதா ஜெத்வானிக்கு ஆறுதல் கூறினார்.

ஜேத்வானி வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா தெரிவித்தார்.

நடிகை ஜேத்வானியின் தந்தை உள்துறை அமைச்சரிடம், புதிய அரசு உடனுக்குடன் எடுத்த நடவடிக்கை விதம் தான் தங்களின் வலியை வெளிப்படுத்த தைரியத்தை கொடுத்ததாக தெரிவித்தார்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 199

    0

    0