ஒரு பெண் வாழ்க்கையை இப்படி பண்ணாதீங்க – பிரியங்காவுக்கு நிரூப் சப்போர்ட்!

Author:
20 September 2024, 7:03 pm

கடந்த சில நாட்களாக விஜே மணிமேகலை மற்றும் பிரியங்காவின் சண்டை விவகாரம் தான் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 5வது சீசனில் விஜே மணிமேகலை தொகுப்பாளினியாக தனது சிறப்பான பணியை செய்து வந்தார்.

vj Priyanka

ஆனால், விஜே பிரியங்கா மணிமேகலையை வேலை செய்ய விடாமல் அங்கு பாலிடிக்ஸ் செய்து தன்னுடைய அதிகாரத்தையும் ஆணவத்தையும். வெளிப்படுத்தி காட்டி மணிமேகலை தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத அளவுக்கு டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார் .

இதனால் அதிரடியாக விஜே மணிமேகலை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து வெளியேறி விட்டார். இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து பிரியங்காவின் முகத்திரையை பலரும் கிழித்து வருகிறார்கள். மேலும் சில பேர் பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: செம Vibe…. “ஹண்டர் வண்டார்” தெறிக்கவிடும் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் பட பாடல்!

niroop

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் பிஜே பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக நிரூப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…. பணம் சம்பாதிப்பதற்காக சிலர் பிரியங்கா பற்றி மிகவும் மோசமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

வியூஸ் பெறுவதற்காக பொய்கள், personal attack, ஆதாரமில்லாத கற்பனைகளை பரப்பி கொண்டிருகிறார்கள்.”ஒரு பெண்ணின் வாழ்க்கையை இப்படி செய்து பணம் சம்பாதிக்கணுமா” என நிரூப் கடுங்கோபத்துடன் கேட்டிருக்கிறார். அவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 245

    0

    0