ஐயோ பாவம்! ஆலியா பட்டுக்கு இப்படி ஒரு நோய் இருக்கா…? அதிர்ச்சி தகவல்!

Author:
20 September 2024, 7:28 pm

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் தற்போது முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். அவர் பாலிவுட் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் நிலையில் பிரபல நட்சத்திர ஹீரோவான ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

alia bhatt - updatenews360

இவர்களுக்கு ஒரு அழகிய மகள் இருக்கிறார். திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தன்னைவிட 10 வயது மூத்தவரான ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்ட அவர் அவருடன் சேர்ந்து தற்போது திரைப்படங்களில் கூட நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள் : அது தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போறீங்க… கடுப்பான ஆலியாபட்..!

alia bhatt - Update News

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு Attention Deficit Disorder (ADD) என்ற நோய் இருப்பதாக கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார். இந்த நோய் இருப்பவர்கள் தன்னை ஒரு விஷயத்தில் 45 நிமிடத்திற்கு மேல் கவனத்தை செலுத்த முடியாது.

அப்படித்தான் ஆலியா பட் தனது திருமணத்திற்கு மேக்கப் போட மேக்கப் ஆர்ட்டிஸ்ட் இரண்டு மணி நேரம் கேட்டாராம். ஆனால் முடியவே முடியாது என சொல்லி ஆலியா மறுத்துவிட்டாராம். அந்த அளவுக்கு தனக்கு நோய் இருப்பதாக ஆலியா பட் கூறியிருக்கிறார் என்ற கேள்விப்பட்ட ரசிகர்கள் அவர் மீது அனுதாபப்பட்டு வருகிறார்கள்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!