தோனி சாதனையை அசால்ட்டா முறியடிச்சிட்டாரே : 2வது இன்னிங்சில் இரண்டு சதம்.. பொளந்து கட்டிய இந்திய வீரர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
21 செப்டம்பர் 2024, 2:01 மணி
Risabh pant
Quick Share

இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வின் சதத்தால் 376 ரன்கள் குவித்தது. குறிப்பாக அஸ்வின் சதம் அடித்து விளாசினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் இந்திய வீரர்களின் பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல் 149 ரன்னில் சுருண்டது.

பின்னர் 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் இன்றைய 3-வது நாள் ஆட்ட உணவு இடைவேளைக்கு முன் அரைசதம் அடித்தனர்.

உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் ரஷிப் பண்ட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இது அவரின் 6-வது சதம் ஆகும். இதன்மூலம் டோனி சாதனையை சமன் செய்தார்.

மேலும் படிக்க: விதியை மாற்றுவோம் விக்கிரவாண்டியில்.. திமுக அதிமுகவுக்கு நிகராக களமிறங்கும் த.வெ.க?!!

டோனி விக்கெட் கீப்பராக 6 சதம் அடித்துள்ளார். அதை ரிஷப் பண்ட் தற்போது சமன் செய்துள்ளார். ரிஷப் பண்ட்டை தொடர்ந்து சுபமன் கில் சதம் அடித்தார்.

இந்தியா 4 விக்கெட் இழப்பிற்க 287 ரன்கள் அடித்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இதனால் வங்கதேச அணிக்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் 119 ரன்னுடனும், கே.எல். ராகுல் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 212

    0

    0