ஒரே ஒரு படம் தான்… மும்பையில் குடும்பத்தோடு செட்டில் ஆன அட்லீ… மொத்த சொத்து எத்தனை கோடி தெரியுமா?

Author:
21 September 2024, 4:02 pm

இந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் அட்லீ தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களை தொடர்ச்சியாக இயக்கி வருகிறார். தற்போது பாலிவுட்டிலே அவர் குடிப்பெயர்ந்து விட்டார் என்று சொல்லலாம். ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார்.

atlee

பாலிவுட்டின் பிரபலமான இளம் இயக்குனராக தற்போது அங்கு வலம் வந்து கொண்டிருக்கிறார். மாபெரும் வெற்றி கொடுத்து வசூல் சாதனை படைத்ததால் அடுத்தடுத்த பல ஸ்டார் நடிகர்கள் அட்லீயின் இயக்கத்தில் நடிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக மீண்டும் ஷாருக்கான் வைத்து ‘லயன்’ என்கிற திரைப்படத்தை அட்லீ இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் நயன்தாராவே ஜோடியாக நடிக்கிறார்.

இது தவிர தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆன பேபி ஜான் திரைப்படத்தையும் அவர் இயக்கி வருகிறார். ஜவான் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அட்லி மனைவி மற்றும் குழந்தையுடன் மும்பையிலே செட்டில் ஆகி அங்கேயே வசித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: சைந்தவி ரொம்ப நல்ல பொண்ணு… ஜிவி பிரகாஷ் விவகாரத்து குறித்து உண்மை ஒப்புக்கொண்ட அம்மா!

atlee

தற்போது ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 30 கோடி வரை சம்பளமாக வாங்கி வரும் அட்லீ ஜவான் திரைப்படத்தில் தான் அவருக்கு ரூ.30 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டது என்பதை குறிப்பிடத்தக்கது.

எனவே அட்லீயின் முழு மொத்த சொத்து மதிப்பு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.. 42 கோடி வரை இருக்கலாம் என தற்போது தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!