கமல் கட்சியிலேயே ஜனநாயகம் இல்லாத நிலையில் அவர் எப்படி ஜனநாயகத்தை காப்பாற்றுவார்? தமிழிசை கேள்வி!
Author: Udayachandran RadhaKrishnan21 September 2024, 7:58 pm
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூரில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நிர்வாகிகள் கூட்டத்திற்கு இன்று முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வருகை புரிந்தார்.
முன்னதாக புரட்டாசி மாதம் சனிக்கிழமையை முன்னிட்டு பொங்கலூர் அவிநாசி பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ராமசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் அர்ச்சனை செய்தார்.
கூட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்
தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
2026 தேர்தல் எங்களுக்கு மிக முக்கியமான தேர்தல் 2024 வெற்றி பெற முடியவில்லை என்றால் ஒரு நம்பிக்கையை எங்களுக்கு கொடுத்திருக்கிறது பல இடங்களில் கோவை உட்பட இரண்டாவது வந்திருக்கிறோம்.
தமிழகத்தில் ஒரு மாற்றம் வந்து ஆக வேண்டும் என்ற சூழ்நிலை உள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை போதை பொருட்களின் புழக்கம் அதிகமாக உள்ளது,
விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் வேங்கை வயலில் சமூகநீதி பாதுகாக்கப்படவில்லை, திருநெல்வேலியில் கூட்டணி கட்சியின் தலைவர் கலை ஆண்டார் அதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஆம்ஸ்ட்ராங் போன்ற தலைவர்களின் கொலைகள் நடந்துள்ளது. திருமாவளவன் போன்ற தலைவர்களே தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறிய வருகிறார்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்களே தற்போது மதுவிலக்கு மாநாடு நடத்த உள்ளார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தில் நிச்சயமாக ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். அதற்கு பாஜகவின் இந்த உறுப்பினர் சேர்க்கை மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
இன்று நடைபெற்ற கமல்ஹாசனின் கட்சி செயற்குழு கூட்டத்தில் ஒரு நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது என கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் எந்த ஜனாயத்தை பாதுகாக்கிறார்கள். கமல்ஹாசன் தான் அந்த கட்சிக்கு தலைவர் மீண்டும் அவரே தான் தலைவர். இங்கு கட்சியில் ஜனநாயகம் கிடையாது.
அண்ணன் ஸ்டாலின் முதலமைச்சராக உள்ளார் தம்பி உதயநிதி துணை முதல்வர்.
காங்கிரஸ் கட்சியில் அன்னை சோனியா காந்தி அவர்கள் தலைவராக உள்ளார். மீண்டும் ராகுல் காந்தி தலைவராகிறார். கட்சியில் ஜனநாயகத்தை பின்பற்ற மாட்டார்கள். ஆனால் ஜனநாயகத்தை பாதுகாக்க கூடிய ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை மூடி மறைப்பதற்காக ஜனநாயகத்தை மறைப்பதாக கூறுகிறார்கள் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
நடிகர் சக்தியாக வந்த கமல்ஹாசனால் எதுவும் செய்ய முடியவில்லை. தம்பி விஜய் அரசியலுக்கு புதிதாக வந்துள்ளார் வருகின்ற 27ஆம் தேதி மாநாடு நடத்துவதாக அறிவித்திருந்தால் ஆனால் தள்ளிப் போட்டு கொண்டு செல்கிறார். நடிகர் விஜயின் பாதை ஒரு சார்ந்த பாதையாக உள்ளது.. விநாயகர் சதுர்த்திக்கு அவர் வாழ்த்து சொல்லவில்லை ஆனால் பெரியாருக்கு வணக்கம் சொல்கிறார்.
தன்னை தமிழ் மகனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் வேண்டுகோள் விடுகிறார். நாங்கள் அனைவரும் தமிழ் மக்களே…. ஒருவேளை மறைமுகமாக சூப்பர் ஸ்டாரை சொல்கிறாரோ என்ற எண்ணம் எனக்கு வருகிறது…
நாம் எந்த கொள்கையை நோக்கி செல்கிறோம் எப்படி மக்களுக்கு உதவ போகிறோம் என்பதெல்லாம் இல்லாமல் மீண்டும் மீண்டும் இனம் மொழி என்ற உணர்வுபூர்வமாக விஷயங்களை கொண்டு வந்து தமிழக மக்களை ஏமாற்றுவதால் ஒரு மாற்றம் இல்லாமல் போய்விடும்.
யாரும் மாற்றத்தை கொண்டு வரப் போவதில்லை நடிகர் கமல் விஜய் என யாரும் மாற்றத்தை கொண்டு வர மாட்டார்கள் திமுகவை மாற்றிய ஆக வேண்டும் என்பதுதான் மாற்றம்.
மாற்றத்திற்கான கட்சியாக பாஜக விளங்குகிறது மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி அமைந்தால் பல்வேறு திட்டங்களை கொண்டுவர முடியும்.
அவிநாசி அத்திக்கடவு திட்டம் கொண்டுவரப்பட்டது ஆனால் முழுமையான பலன் கிடைக்கவில்லை. சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்ட வேண்டும் என்று சொன்னவுடன் மத்திய அரசு தமிழகத்திற்கான நியாயத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.
ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்தப்பட்டது ஆனால் அதற்கு டிவிட் செய்த கனிமொழி பிரதமரின் பெயரைக் கூட சொல்ல மறுக்கிறார்கள்.
வெளிநாட்டிற்குச் சென்று முதலீட்டைக் கொண்டு வருகிறோம் என்று சொல்லும் அவர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் ஒழுங்காக பங்கேற்று இருக்கலாம்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் இப்போது பிரதமரை சந்திக்கிறோம் என்று சொல்கிறார்கள். பிரதமர் பரந்த மனப்பான்மை உள்ளவர் கண்டிப்பாக சந்திப்பார். தமிழக மக்களின் ஒரே நோக்கம் உதயநிதியாக தான் உள்ளது. எனவே மாற்றம் வேண்டும் அது பாஜக கட்சி தான் கொண்டு வரும். பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு பெண் குழந்தைகளுக்கான காப்பீடு திட்டம், பயிர் காப்பீடு திட்டம், 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்,
மரியாதைக்குரிய பாரத பிரதமருக்கு தெரியும் சொந்தப் பிள்ளைகளே தங்களது பெற்றோர்களை கவனிக்க மறுக்கிறார்கள் அவர்களை நாம் தான் கவனிக்க வேண்டும் என நினைக்கிறார். எவ்வளவு சம்பாதித்தாலும் தாய் தந்தை கவனித்து வருகிறது. பொருளாதார சீலிங் கூட இல்லாமல் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை கூறியிருக்கிறார். மத்திய அரசு அறிவிக்கும் நல்ல திட்டங்கள் நேரடியாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.
உதயநிதி துணை முதல்வர் ஆவதை பாஜக எதிர்க்கவில்லை. இந்த தமிழகத்தின் ஒரு குடிமகளாக தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஏனென்றால் ஜனநாயக முறைப்படி முதியவர்கள் இருக்கும்போது அவர்களின் முதிர்ச்சியினால் கிடைக்கின்ற திட்டங்கள் அனுப்பவங்கள் இல்லாமல், உங்கள் கட்சிக்கு வேண்டாம் ஆனால் தலைவர் ஆக்கிக் கொள்ளுங்கள், ஆட்சிக்கு வரும்பொழுது தமிழ்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய கடமை உள்ளது.
அவரை விட அனுபவசாலிகள் எவ்வளவோ இருக்கிறார்கள், அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? ஸ்டாலினின் மகன் கலைஞரின் பேரன் என்ற தகுதி மட்டும் தான் உள்ளது.
இவற்றை மட்டுமே தகுதியாக கருதி துணை முதல்வர் ஆவதற்கான தகுதியாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்றவாறு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ளோம்.
2029 ஆம் ஆண்டில் வரக்கூடிய தேர்தலுக்காக தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமிடப்பட்டுள்ளது இப்போது வரக்கூடிய தேர்தல் இதனால் பாதிக்காது.
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சந்தேகம் வந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. பாஜக நிர்வாகிகள் மீது ஏன் குற்றம் சொல்ல வேண்டும். சந்தேகத்தை கேட்டால் இல்லை என்று சொல்லுங்கள் அதை விடுத்து குற்றம் சொல்பவர்களை கைது செய்வது என்பது எப்படி நியாயமாகும். குற்றவாளிகளை எல்லாம் விட்டு விடுகிறார்கள். கொலை கொள்ளை கஞ்சா விற்பனை செய்பவர்களை எல்லாம் விட்டு விடுகிறார்கள். பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் ஏதாவது பதிவுகளை போட்டாலோ, உண்மையான சந்தேகங்களை எழுப்பினாலோ, அவர்கள் மீது வழக்கு போடுகிறார்கள். இதுதான் இவர்களின் கருத்து சுதந்திரத்தை பாராட்டும் தன்மை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து மரியாதைக்குரிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே பி நட்டா அவர்கள் அறிக்கை கேட்டுள்ளார். திருப்பதி லட்டு விவகாரத்தில் பிரதமர் அமைச்சரவையில் இருக்கும் ஒரு அமைச்சர் அறிக்கை கேட்டுள்ளார் என்ற போது பிரதமரும் கவலை அடைந்துள்ளார் என்பதை தெரிந்து கொள்கிறோம்.
திருப்பதி லட்டில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.NDA கூட்டணியில் விரிசல் ஏற்படுவதை எல்லாம் பார்த்துக் கொள்ளலாம். உண்மையான நெய்யினால் லட்டு தயாரிக்கப்பட்டுள்ளதா உதிராமல் பிதுராமல் உள்ளதா என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
நாங்கள் லட்டு உதிர்கிறதா என கவலைப்பட்டுக் கொண்டுள்ளோம் ஆனால் திருமாவளவன் கூட்டணி உதிர்கிறதா என கவலைப்பட்டுக் கொண்டுள்ளார்.
இந்த ஆட்சி காமராஜர் ஆட்சியா இல்லையா என்று காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
லட்டு என்பது புனித தன்மை கொண்டது. இறைவனின் பிரசாதமாக லட்டை பார்க்கிறார்கள். ஆகையினால் லட்டின் புனித தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். லட்டு தானே என விட்டுவிட முடியாது. புரட்டாசி மாதம் கூட்டம் அதிகமாக இருக்கும் அதிக அளவில் லட்டு வாங்கி செல்வார்கள் ஆகையினால் அதன் புனித தன்மையை பாதுகாக்க வேண்டும்.
மது ஒழிப்பு குறித்து ஏற்கனவே மாநாடு நடத்தியுள்ளோம் ஏற்கனவே மண்டல அளவில் திருப்பூரில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தி 36,000 பேர் ஒரே நாளில் கைதானோம். நாங்கள் எப்போதுமே மதுக்கு எதிரானவர்கள் தான்.
ஆனால் மதுக்கு ஆதரவாக இருந்து கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் சிலர் கலந்து கொள்வதுதான் வேடிக்கையாக உள்ளது.
உறுப்பினர் சேர்க்கைக்கான பொறுப்பாளர் மதிப்பிற்குரிய எச் ராஜா அவர்கள் தான்.
மாநிலத் தலைவர் வெளிநாட்டிற்கு படிக்கச் சென்றுள்ளதால் எச் ராஜா அவர்களின் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்ற வருகிறது. அவர் தலைமையில் அனைவரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: இதென்னடா பிரியாணி கடைக்கு வந்த சோதனை… பிரபல SS ஐதராபாத் கடைக்கு சீல்!!!
பாஜகவில் அனைத்து தலைவர்களும் சமூகமாக உள்ளார்கள். மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளிநாட்டுக்கு சென்று படிக்கட்டும் அண்ணன் எச். ராஜா எங்களை வழி நடத்தட்டும் நாங்கள் அவர் வழி நடப்போம். கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை தமிழகத்தை முறையாக வழிநடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.
பாஜகவின் தொடர் முயற்சியால் தேங்காய் கொள்முதல் விலை மூன்று ரூபாயில் இருந்து ஐந்து ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்பகுதி தென்னை விவசாயிகளுக்காக இந்த உதவியை பாஜக செய்துள்ளது.