கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து மனைவி ஆர்த்தி இந்த விஷயம் எனக்கு தெரியவே தெரியாது எங்களுடைய ஆலோசனை கேட்காமலேயே அவரின் தனிப்பட்ட முடிவாக விவாகரத்தை அறிவித்துவிட்டார்.
இது குடும்ப நலன் சார்ந்து எடுக்கப்பட்டதில்லை. முழுக்க முழுக்க அவருடைய முடிவு. இது எனக்கு தெரியவே தெரியாது. எனக்கூறி அதிர்ச்சியை கிளப்பி இருந்தார் இதை அடுத்து ஜெயம் ரவி பிரபல பெண் பாடகியான கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் தகாத உறவு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படி அடுக்கடுக்கான விஷயங்கள் இந்த விவாகரத்தை குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் சமயத்தில் நடிகர் ஜெயம்ரவி இது குறித்து நிரூபர்களை சந்தித்து…..பெண் பாடகியுடன் என்னை இணைத்து பேசுவது தவறு. அந்த பொண்ணுக்கு அம்மா அப்பா இல்லை அவருடன் இணைத்து பேசினால் அது பேசியவர்களுக்கு தான் அசிங்கம் அந்தப் பெண் லைசன்ஸ் பெற்ற சைக்காலஜிஸ்ட் நிறைய பேருக்கு உதவிகள் செய்திருக்கார். மன அழுத்தத்திலிருந்து எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார்.
அவரோடு என்னோடு இணைத்து பேசுவது மிகப்பெரிய தவறு. நான் அவரோடு ஒரு ஆன்மீக மையம் ஆரம்பிக்க முடிவு செய்தேன். அதை தவிர்ப்பதற்காக இப்படி பேசப்படுகிறதா என்று எனக்கு புரியவில்லை. ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் தொடர்புபடுத்தி பேசினார்கள். அவருக்கு நிச்சயமாகி போய்விட்டார். என கூறியிருந்தார். ஜெயம் ரவியின் இந்த பேச்சு பாடகியுடன் தகாத உறவு இருப்பதை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது இவர்களின் இந்த விவாகரத்து விவகாரம் குறித்து அந்தகன் சமீபத்தில் பேசியிருக்கிறார். ஜெயம் ரவி பாடகி கெனிஷா உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போதும் அதை பலரும் ஏற்கவில்லை நம்பவில்லை.
இது குறித்து ஜெயம் ரவிக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது அதில் ஓரளவுக்கு உண்மை இருப்பதாக சொன்னார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் ஆர்த்தி தான் ஜெயம் ரவியை டார்ச்சர் செய்து கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் அவர் வெளியே வந்து பிறகு வேறு அந்த பாடகியுடன் நெருக்கமாக பழகி தகாத உறவு ஏற்பட்டதாகவும் கோவாவுக்கு சென்று தங்கி இருப்பதாக செய்திகள் கூறுகிறது.
அதை ஆர்த்தி ஆதாரத்துடன் உறுதிப்படுத்தினார். தன் மீது முழு பழியும் போட்டு விட்டதால் ஆர்த்தி தன் தரப்பு பாதி பிரச்சனை இருந்தாலும் ஜெயம் ரவி பக்கமும் நிறைய தவறுகள் இருக்கிறது என்பதை இதன் மூலம் சுட்டிக்காட்டினார். இது குறித்து மேலும் பேசிய அவர் இதில் குஷ்பூவுக்கு தான் மிக முக்கிய ரோல் இருக்கிறது .
இதையும் படியுங்கள்:73 வயசிலும் என்ன எனர்ஜி….. மனசிலாயோ பாடலுக்கு ரிகர்சல் செய்த ரஜினி – வைரல் வீடியோ !
ஏனென்றால் ஆர்த்தி ரவி காதலுக்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக கூட நின்று அவர்களின் காதல் திருமணம் வரை நோக்கி சென்றதற்கும் இருவரது பெற்றோரிடமும் சம்மதம் பெறுவதற்கு மிக முக்கிய நபராக இருந்து வந்தவர் குஷ்புதான். எனவே அவர் கீழே இறங்கி வந்து இந்த தரப்பிலும் பேச வேண்டும். விவாகரத்து குறித்து அவர் பேசி அவர்களை சரி செய்ய வேண்டும். ஆனால், இப்போ எங்கே போனார் குஷ்பூ? என்று தெரியவில்லை என அந்தகன் பேசி இருக்கிறார்.