எவ்வளவு களைப்பா இருந்தாலும் சரி… இந்த உப்ப தண்ணில கலந்து குளிச்சு பாருங்க… கண்ணு குட்டி மாதிரி துள்ளி ஓடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
24 September 2024, 2:25 pm

எப்சம் உப்புகள் என்பது பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சைகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. குளிக்கும் தண்ணீரில் எப்சம் உப்பு சேர்ப்பதால் நமக்கு ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கிறது. இதன் காரணமாகவே எப்சம் உப்பு அதிக பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை எப்சம் உப்பு பயன்படுத்துவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியாது என்றால் அதனை இப்போது பார்ப்போம். 

மேலும் படிக்க: நீங்கள் வீண் என நினைத்து தூக்கி எறிந்த எலுமிச்சை தோலின் அசற வைக்கும் மருத்துவ குணங்கள்!!!

ஓய்வளிக்கும் விளைவு 

எப்சம் உப்பு பயன்படுத்துவதன் முக்கியமான காரணங்களில் ஒன்று அது உடலுக்கு வழங்கும் ஓய்வளிக்கும் விளைவு. எப்சம் உப்பில் குறிப்பாக காணப்படும் மெக்னீசியம் உடலில் உள்ள மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. தோலின் மூலமாக நமது உடலில் உறிஞ்சப்படும் மெக்னீசியம் நரம்பு அமைப்பை அமைதிப்படுத்தி கார்டிசால் அளவுகளை குறைக்கிறது. நாள் முழுவதும் வேலை பார்த்து களைத்து வீடு திரும்பும் நபர்களுக்கு இருக்கும் அழுத்தத்தை போக்குவதற்கு அவர்கள் எப்சம் உப்பு கலந்த தண்ணீரில் குளிப்பதை கருத்தில் கொள்ளலாம். 

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் 

தசைகளை அமைதிபடுத்தவும், மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கவும் எப்சம் உப்பில் குளிப்பது பயனளிக்கும். மெக்னீசியம் வீக்கத்தை குறைத்து தசைகளுக்கு ஓய்வளிக்கிறது. கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் உடற்பயிற்சிக்கு பிறகு எப்சம் உப்பு குளியலில் ஈடுபடலாம். மேலும் இந்த குளியல் ஆர்த்ரைடிஸ் காரணமாக மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், நாள்பட்ட வலி போன்றவற்றை குறைப்பதற்கு உதவுகிறது.

தோலில் ஏற்படும் அதிசய விளைவு 

தோலை பொறுத்தவரை எப்சம் உப்பு கலந்த தண்ணீரில் குளிப்பதால் பல பலன்கள் கிடைக்கிறது. மெக்னீசியம் சல்பேட் தோலில் உள்ள இறந்த  செல்கள் மற்றும் நச்சுப் பொருட்களை அகற்றி சருமத்தை மென்மையாக மாற்றுகிறது. மேலும் தோலில் உள்ள எரிச்சல் மற்றும் வீக்கத்தை குறைத்து எக்ஸிமா அல்லது சொரியாசிஸ் போன்ற சரும நிலைகளில் இருந்து பாதுகாக்கிறது. அது மட்டும் அல்லாமல் தோலுக்கு தேவையான மினரல்களை அளித்து அதன் ஆரோக்கியமான தோற்றத்திற்கு உதவுகிறது. 

நல்ல உறக்கம் 

வழக்கமான தூக்க அட்டவணை பராமரிப்பதில் மெக்னீசியம் முக்கிய பங்கு கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. படுக்கைக்கு செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரில் எப்சம் உப்பு கலந்து குளிப்பது நல்ல உறக்கத்தை அளிக்கும். எப்சம் உப்பு குளியலுக்கு பிறகு மனநிலை மற்றும் தூக்கத்தை சீரமைக்கும் செரோட்டோனின் உற்பத்தி செய்யப்படுகிறது. இரவு முழுவதும் தடையில்லாத தூக்கத்தை பெறுவதற்கு இதனை கட்டாயமாக நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். தூக்க கோளாறுகள் அல்லது தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கும் இது பயனளிக்கும். 

உடலில் உள்ள நச்சுகளை அகற்றுகிறது 

எப்சம் உப்பில் உள்ள சல்பேட்டுகள் நமது உடலில் காணப்படும் நச்சுகள் மற்றும் கன உலோகங்களை அகற்றுகிறது. இது வலி மிகுந்த தசைகளுக்கு சௌகரியத்தை அளிக்கிறது. நமது தோலில் கண்ணுக்குத் தெரியாத துளைகள் இருக்கும் காரணத்தால் நாம் குளிக்கும் தண்ணீரின் வழியாக மினரல்களை சேர்க்கும் போது நமது உடலானது ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் என்ற செயல்முறையில் ஈடுபடுகிறது. இது நமது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 174

    0

    0