“இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” – புதிய Promo-வுடன் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி!

Author:
24 September 2024, 9:02 pm

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்து விரைவில் 8-வது சீசன் துவங்க இருக்கிறது. முதல் சீசனில் இருந்து இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகரும் உலகநாயகனுமான கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார்.

திடீரென 8-வது சீசன் தான் தொகுத்து வழங்கப் போவதில்லை எனக்கூறி அதிரடியான அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு அதிலிருந்து வெளியேறி இருந்தார். இதனால் அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவது யார் ?என்ற பேச்சு தான் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

vijay sethupathy

பின்னர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொகுப்பாளராக விஜய் சேதுபதி தான் கமிட் ஆகி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். ப்ரோமோ வீடியோவும் வெளியாகியிருந்தது. விஜய் சேதுபதி கமல் விட்டு சென்ற இடத்தை நிரப்புவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் ப்ரோமோக்களின் மூலமாகவே ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் விஜய் சேதுபதி.

இதையும் படியுங்கள்: http://10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலையே இருக்காது – யுவன் சங்கர் ராஜா பரபரப்பு பேட்டி!

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கான லேட்டஸ்ட் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில், “இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என விஜய் சேதுபதி பேசும் வசனங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இதோ அந்த வீடியோ:

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 242

    0

    0