பீரியட்ஸ் டைம்ல உடற்பயிற்சி செய்யலாமா???

Author: Hemalatha Ramkumar
25 September 2024, 10:20 am

மாதவிடாயின் பொழுது உடற்பயிற்சி செய்வது பல நன்மைகள் அளிக்கும் என்ற கருத்து பொதுவாக உள்ளது என்றாலும் கூட பல பெண்கள் பல்வேறு காரணங்களுக்காக மாதத்தின் இந்த நேரத்தில் தங்களுடைய உடற்பயிற்சி செய்வதை தவிர்த்து விடுகின்றனர். எனினும் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ள ஒரே காரணத்திற்காக நீங்கள் உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாதவிடாய் சமயத்தில் உடற்பயிற்சி செய்வது உண்மையில் உங்களுக்கு பல்வேறு பலன்களை அளிக்கும். எனவே இது சம்பந்தமாக பொதுவாக கேட்கப்படும் சில கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை இப்போது பார்க்கலாம். 

மாதவிடாயின் பொழுது உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதா?

ஆம், நிச்சயமாக மாதவிடாயின் போது உடற்பயிற்சி செய்வது பொதுவாக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அதிலும் இந்த சமயத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது எக்கச்சக்கமான நன்மைகளை அள்ளித் தருகிறது. உடற்பயிற்சியின் பொழுது என்டார்பின்கள் என்ற மனநிலையை மேம்படுத்தும் ஹார்மோன்கள் வெளியிடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அது மாதவிடாய் சம்பந்தப்பட்ட அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. 

மாதவிடாயின் பொழுது என்ன வகையான உடற்பயிற்சிகளை செய்யலாம்? 

மாதவிடாயின் பொழுது உடற்பயிற்சி

மாதவிடாயின் பொழுது மிதமான தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. உதாரணமாக நடைப்பயிற்சி, பொறுமையாக ஜாக்கிங் செல்வது, நீச்சல் மற்றும் யோகா போன்றவை சிறந்த ஆப்ஷன்களாக இருக்கும். உங்களுடைய உடலுக்கு அதிக அழுத்தம் கொடுக்காத வகையில், அதே நேரத்தில் உங்களை ஃபிட்டாக இருக்க உதவும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள். மேலும் யோகா மற்றும் நீட்சி பயிற்சிகளை செய்வது மாதவிடாயின் பொழுது உங்களுக்கு ஏற்பட்டுள்ள டென்ஷனை போக்கி, ரிலாக்ஸாக இருக்க உதவும். 

மேலும் படிக்க: மாதவிடாயின் போது பப்பாளி பழம் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

மாதவிடாயின் பொழுது தவிர்க்க வேண்டிய உடற்பயிற்சிகள் என்னென்ன? 

அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகள் அல்லது பளு தூக்குதல் போன்றவற்றில் ஈடுபட வேண்டாம். அதிலும் குறிப்பாக உங்களுக்கு மோசமான மாதவிடாய் வலி இருந்தாலோ அல்லது அதிக ரத்தப்போக்கு இருந்தாலோ தீவிரமான உடற்பயிற்சிகளை ஒருபோதும் செய்யாதீர்கள். உங்கள் அடிவயிறு அல்லது கீழ் முதுகுக்கு அழுத்தம் தரக்கூடிய எந்த ஒரு உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டாம். 

உடற்பயிற்சியில் ஈடுபடுவது மாதவிடாய் சம்பந்தப்பட்ட அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தர உதவுமா? நிச்சயமாக வழக்கமான உடற்பயிற்சி மாதவிடாய் சம்பந்தப்பட்ட அறிகுறிகளான வயிற்று வலி, வயிறு உப்புசம் மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி என்டார்பின் ஹார்மோன்களை வெளியிடுவதால் அவை இயற்கையான வலி நிவாரணையாகவும், மனநிலையை மேம்படுத்த கூடியவையாகவும் அமைகிறது. 

குறிப்பிட்ட சில மாதவிடாய் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வரும் பெண்கள் மாதவிடாயின் பொழுது உடற்பயிற்சியை எவ்வாறு அணுக வேண்டும்? 

என்டோமெட்ரியோசிஸ் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் அதிகப்படியான வலியை அனுபவிப்பார்கள் என்பதால் அவர்கள் யோகா அல்லது பைலேட்ஸ் போன்ற லேசான உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். இதுவே PCOS பிரச்சனை உள்ள பெண்களுக்கு வழக்கமான உடற்பயிற்சி அத்தியாவசியமானது. ஆனால் அதனுடன் சேர்த்து அவர்களுக்கு போதுமான அளவு ஓய்வு தேவை. 

ஆகவே உங்கள் உடலை ஆக்டிவாக வைத்துக் கொள்வது பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. எனினும் உங்களுடைய உடல் உணர்த்தும் அறிகுறிகளை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு உங்கள் வழக்கத்தை மாற்றியமைத்துப்பது அவசியம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Bismi Criticized Nayanthara கண்ணை மறைத்த பண வெறி.. நயன்தாராவை விளாசிய பிரபலம்!!
  • Views: - 204

    0

    0