சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையின் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அக்டோபர் 10ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் உலக முழுக்க ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள் .
இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து மஞ்சு வாரியர், அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, அபிராமி, ரித்திகா சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். முன்னதாக இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
இந்த திரைப்படத்தை ஞானவேல் இயக்க தற்போது படத்தின் கடைசி கட்ட வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. அதன்படி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பட குழு பிஸியாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற வேட்டையன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குனரான ஞானவேல் நான் இந்த மேடையில் இப்படி நிற்பதற்கு சூர்யா சாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
இதையும் படியுங்கள்: சசி குமாரின் நிறைவேறாத ஆசை…. பாவம் மனுஷன் எவ்வளவு ஏங்கியிருக்காரு!
நான் நீ இப்போது மேடையில் நிற்கிறதுக்கு முக்கிய காரணமே சூர்யா சார் தான் காரணம் என்று வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் முதலில் சூர்யாவுக்கு நன்றி சொல்லிவிட்டு தான் பேசவே தொடங்கினார்.
முன்னதாக சூர்யா நடிப்பில் வெளிவந்த “ஜெய் பீம்” திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சூர்யா கொடுத்த வாய்ப்பை நன்றி மறவாத ஞானவேல் சூப்பர் ஸ்டார் படத்தின் மேடையில் தெரிவித்திருப்பது அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.