ஜிஎஸ்டியில் நிறைய தப்பு இருக்கு.. திருத்தம் கொண்டு வந்தால் எல்லோருக்கும் வாய்ப்புள்ளது : அமைச்சர் பிடிஆர்!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2024, 1:29 pm

கோவை விளாங்குறிச்சி பகுதியில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டு பல காரணங்களுக்காக நான்கு ஆண்டுகளுக்கு மேல் தாமதமாகி வந்த கட்டிடம் தற்போது ஏறத்தாழ நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முழுவதும் நிறைவடைந்து முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க: சாட்சிகளை செந்தில் பாலாஜி கலைச்சிடுவாரு… அமலாக்கத்துறைக்கு அலர்ட் கொடுக்கும் வானதி சீனிவாசன்..!

சிறு குறு தொழில் நிறுவனங்கள், புதிய தொழில் முனைவோர்களுக்கு இதில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் 3 ஆயிரத்து 200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறிய அவர்,நிதி அமைச்சராக இருந்து போது, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இணையான அனைத்து வசதிகளுடன் கூடிய ஹைடெக் சிட்டிகளாக
கோவை, வடக்கு சென்னை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளை உருவாக்குவது குறித்து அறிவித்து இருந்ததாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் பணிகளை வேகப்படுத்துவதாகவும் கூறினார்.

நிதி அமைச்சராக இருந்த போது ஜி.எஸ்.டியில் இருந்த குறைகளை சுட்டிக்காட்டியதாகவும் நல்ல மனதோடு அனைவருக்கும் வாய்ப்பளித்து ஜி.எஸ்.டியில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு நினைத்தால் விரைவில் இதில் திருத்தம் கொண்டு வரலாம் என தெரிவித்தார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 236

    0

    0