செந்தில் பாலாஜி குறித்து பேசும் சீமான் பாஜக குறித்து பேச பயப்படுவது ஏன்? குப்பனுக்கும் சுப்பனக்கும் பாதுகாப்பு இருக்கா?

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2024, 8:28 pm

சட்டமன்ற உறுப்பினராக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு இந்த நிலை என்றால் நாட்டில் உள்ள குப்பனுக்கும் சுப்பனக்கும் சட்டப் பாதுகாப்பு எங்கே உள்ளது?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த நாதகவுண்டன்பாளையம் பகுதியில் முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவருமான என்.எஸ் பழனிச்சாமியின் மணி மண்டபத்திற்கு காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு தலைவர் செல்வப் பெருந்தகை வருகை புரிந்தார்.

அவருக்கு திருப்பூர் வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிராஜ் சார்பில் பட்டாசு வெடித்து பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் என் எஸ் பழனிச்சாமியின் சிலை மற்றும் மணிமண்டபத்திற்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் கூறுகையில் செந்தில் பாலாஜி விடுதலையாகி இருக்கிறார். மாண்புமிகு உச்ச நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி இருக்கிறது. காங்கிரஸ் இயக்கத்தின் சார்பாக வரவேற்கிறோம்.பாரதிய ஜனதா கட்சி 11 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது,21 கட்சிகளை மிரட்டி அடிபணிய வைத்திருக்கிறது.

அதில் 21 வழக்குகளையும் திரும்ப பெற்றிருக்கிறது. மகாராஷ்டிராவை சார்ந்த அஜித் பவார் மீது ஒரு கோடி லட்சம் ரூபாய் ஊழல் அதுவும் திரும்ப பெறப்பட்டது. நாராயண ராணா, குமாரசாமி 300 கோடி ரூபாய் மைனிங் ஸ்கேம் என்று சொன்னார்கள் இன்று சித்தராமையாவிற்கு அனுமதி கொடுத்த ஆளுநர் குமாரசாமிக்கு ஏன் அனுமதி தர மறுத்தது இதுதான் பாஜகவின் அரசியல்.

இவர்களை எல்லாம் வாஷிங் பவுடர் நிர்மா என்று வாஷிங்மெஷினில் போட்டு வெண்மையாக்கி வெளியே எடுக்கிறார்கள். வழக்கு போடுவார்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள் சிறை பிடிப்பார்கள் பாஜகவில் இணைந்த உடன் கங்கையில் குளித்த புனிதவான்கள் போல வெளியே வருவார்கள் இதுதான் பாஜகவின் மாடல் ஆட்சி. ஜனநாயகத்தை எவ்வளவு காலம் பாஜக அரசு அடைத்து வைக்க முடியும் ஒரு நாள் ஜனநாயகமே வெல்லும் என்ற அடிப்படையில் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் அன்று வெளியில் இருந்திருந்தால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் என்பதால் அவரை சிறை பிடித்தார்கள் இருப்பினும் சிறையில் இருந்தாலும் அவருடைய சகாக்கள் கொங்கு மண்டலத்தில் திமுகவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர்.

அதேபோல் இந்தியா கூட்டணியும் வெற்றி பெற்றது. சட்டத்தை செந்தில் பாலாஜி வென்றெடுத்து இருக்கிறார். அமைச்சராக செந்தில் பாலாஜி விரைவில் வருவார்.சீமான் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில் அதற்கு பதில் அளித்த அவர் சீமான் இங்கு ஒரு நியாயம் அங்கு ஒரு நியாயம் என்று பேசுவார்.

வழக்கை நடத்தி சிறை தண்டனையை செந்தில் பாலாஜிக்கு பெற்றுத் தாருங்கள் அதை நாங்கள் விமர்சிக்க ஆனால் விசாரணை என்ற பெயரில் ஒன்றை ஆண்டுகள் அவரை சிறையில் வைத்தது நியாயமா.?.

பலமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு இந்த நிலைமை என்றால் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கிராமத்தில் உள்ளவனுக்கும் என்ன சட்ட பாதுகாப்பு உள்ளது.

தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஊழல் வழக்கை நீதிமன்றமே இறுதி முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 160

    0

    0