திமுக நிர்வாகி படுகொலை…ஆறுதல் சொல்ல வந்த திமுக எம்எல்ஏவை உறவினர்கள் விரட்டியதால் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan27 September 2024, 2:40 pm
திமுக நிர்வாகி படுகொலையை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டநிலையில் ஆறுதல் சொல்ல வந்த எம்எல்ஏவை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர் அருகே நேற்று மாலை திமுகவைச் சேர்ந்த ஒன்றிய பொருளாளர் மாரி பெரியண்ணா மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு வேடசந்தூர் பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதை எடுத்து பிரயோத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
இந்நிலையில் இன்று காலை முதல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த திமுக பிரமுகரின் உறவினர்கள் குவிந்தனர்.
சுமார் 500-க்கும் மேற்பட்ட உறவினர்கள் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பியும் வருகின்றனர்.
மேலும் படிக்க: அமைச்சர் வீட்டில் புகுந்த அமலாக்கத்துறை.. ஒரே நேரத்தில் 15 இடங்களில் சோதனை.. பரபரப்பு!
இதையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயிரிழந்த திமுக பிரமுகர் மாரி பெரியண்ணாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்த வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜனிடம் கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பிய போராட்டக்காரர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காரில் ஏறி சென்றார் சட்டமன்ற உறுப்பினர்.
தொடர்ந்து பதட்டமான சூழ்நிலையில் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருந்து வந்த நிலையில் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தை பின் கலைந்து சென்றனர்.