செலவுக்கு காசு இல்ல தரீங்களா? ஜெயம் ரவி பற்றி பேசிய விக்ரம் – அப்போ ஆர்த்தி பண்ணதெல்லாம் உண்மை தானா?

Author:
27 September 2024, 7:04 pm

கடந்த சில நாட்களாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஜோடி விவாகரத்து விவகாரங்கள் தான் நாளுக்கு நாள் பேசப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் இந்த விவாகரத்து விஷயத்தில் புதுப்புது விஷயங்கள் வெளியாகி ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

குறிப்பாக ஜெயம் ரவியின் நடத்தையில் முன்னர் சந்தேகித்து அவர் பாடகி கெனிஷா உடன் தகாத உறவில் இருப்பதாக மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார். இதனால் ஜெயம் ரவி ரசிகர்களை இழந்தார். ஆனால், தற்போது எல்லோரும் ஜெயம் ரவி பக்கம் ஆதரவாக அவருக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்.

jeyam ravi

காரணம் ஆர்த்தி அவரை மிகவும் மோசமாக கொடுமை செய்து வந்ததாகவும் தன்னை அடிமை போல் வைத்திருந்தார். தன்னிடம் ஒரு பேங்க் அக்கவுண்ட் கூட இதுவரை இல்லை. எல்லாமே அவருடைய கண்ட்ரோலில் தான் இருக்கும். எனக்கு பத்து ரூபா காசு வேணும் என்றாலும் கூட நான் ஸ்கொய்ப் பண்ணினால் உடனே ஆர்த்திக்கு மெசேஜ் போய்விடும்.

உடனே அவர் எதுக்கு இதை பண்ண? என்ன செலவு?யார் கூட இருக்க? என்று கேள்வி கேட்பார். அதை என்னிடம் கேட்காமல் என்னுடைய அசிஸ்டன்ட் இதெல்லாம் கேட்டு என்னை அசிங்கப்படுத்துவார் என ஜெயம் ரவி கூறியதை அடுத்து பலரும் அவருக்கு ஆதரவுகளை தெரிவித்து வருகிறார்கள் .

vikram

இந்நிலையில் நடிகர் விக்ரம் சில நாட்களுக்கு முன்னால் ஜெயம் ரவி குறித்து விருது விழா ஒன்றில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, என்னிடம் காசு செலவுக்கு இல்லை. அந்த சமயம் ஜெயம் ரவியிடம் நான் செலவுக்கு பணம் கேட்டேன். அவரோ என்னிடம் 500 ரூபாய் தான் இருக்கு இருங்க என்னோட மனைவியிடம் கேட்டு வாங்கி வருகிறேன் என்று சொல்லி ஆர்த்தி இடம் தான் வாங்கி தந்தார்.

இதையும் படியுங்கள்: No Caste சான்றிதழ் வாங்கிய கயல் ஆனந்தி – குவியும் வாழ்த்துக்கள்!

jeyam-ravi

அவர் எல்லாமே ஆர்த்தியிடம் தான் கேட்பார் என்று சொல்ல ஜெயம் ரவி கீழே இருக்கையில் அமர்ந்து சிரிக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இதை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் அப்போ ஜெயம் ரவி மனைவி தன்னை மிகவும் அடிமை போல நடத்துகிறார் என்று சொன்னதெல்லாம் உண்மைதான் போல பாவம் மனுஷன் ஆர்த்தியின் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் விவாகரத்து செய்திருக்கிறார் அவருக்கு ஆதரவாக கருத்து கூறி வருகிறார்கள்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!