ஐயோ எல்லாமே போச்சு…. உடைந்து அழுத லோகேஷ் கனகராஜ் – வருத்தத்தில் ரஜினி!

Author:
28 September 2024, 11:09 am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடைந்த திரைப்படத்தின் நடிகர் சௌபின் ஷாகிர், தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா ,நடிகை ஸ்ருதிஹாசன், சத்தியராஜ், உபேந்திரா உள்ளிட்டோரின் போஸ்டர்கள் வெளியாகி அவர்களின் கேரக்டரை பட குழு அறிவித்திருந்தது.

Coolie

இந்த திரைப்படம் தங்க சுரங்களை மையப்படுத்தி கேங்ஸ்டர் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தில் ரஜினியின் இன்ட்ரோ வீடியோ முதல் ஒவ்வொரு கேரக்டர்களின் இன்ட்ரோ வீடியோக்கள் பட குழு வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் லோகேஷ் கனகராஜ் கூலி படுத்தால் மிகுந்த அதிருப்திக்குள்ளாகி எல்லாமே போச்சு என மனமுடைந்து நொறுங்கிப் போய்விட்டாராம். என்ன அது என்று கேட்டீர்கள் ஆனால்….. கூலி திரைப்படத்தில் நாகார்ஜுனா நடித்துள்ள காட்சிகள் இணையத்தில் வெளியாகி சில நாட்களுக்கு முன்னர் தீயாய் பரவியது.

lokesh

இதை அறிந்த லோகேஷ் கனகராஜ் படம் எவ்வளவு ரகசியமாக எடுக்கப்பட்டாலும் இப்படி வெளியாகி விடுகிறதே என்ற ஒரு வேதனைகள் இருக்கிறாராம். அதாவது, படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒருவர் செல் போனால் அந்த காட்சிகளை படம் எடுத்து இணையத்தில் லீக் செய்திருக்கிறார்.

Nagarjuna

இதையும் படியுங்கள்: செலவுக்கு காசு இல்ல தரீங்களா? ஜெயம் ரவி பற்றி பேசிய விக்ரம் – அப்போ ஆர்த்தி பண்ணதெல்லாம் உண்மை தானா?

கூலி படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதால் அப்படத்தை இயக்கும் லோகேஷ் கனராஜ் வேதனை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு இருக்கும் அவர்…. கடந்த இரண்டு மாதங்களாக உழைத்த பல தொழிலாளர்களின் உழைப்பு ஒரே ஒரு வீடியோவால் வீணடிக்கப்பட்டது என வேதனை தெரிவித்து இருக்கிறார். மேலும் ஒட்டு மொத்த திரை அனுபவத்தையும் கெடுக்கும் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் லோகேஷ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?