வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. வேடிக்கை பார்க்க சென்றவர்கள் அலறி அடித்து ஓட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2024, 11:26 am

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது இந்த வெடி விபத்து சாத்தூரை சுற்றி 15 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றளவுக்கு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

தொடர்ந்து கடந்த 2 மணி நேரத்திற்கு மேலாக அந்த பட்டாசு ஆலையில் உள்ள பட்டாசுகள் வெடித்து சிதறி வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

சாத்தூர்,சிவகாசி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு துறை வாகனங்களும் பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வரும் பட்டாசு ஆலை நுழைவாயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முழுமையாக பட்டாசுகள் வெடித்து முடித்த பின்னரே ஏதும் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து தெரியவரும்

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?