உதவி செய்வது போல நடித்து பள்ளி மாணவியை மிரட்டி பலாத்காரம்.. புதருக்குள் வைத்து கொடூர சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2024, 11:55 am

பேர்ணாம்பட்டு அருகே கூலி தொழிலாளி ஒருவருடைய 13 வயது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

புதன்கிழமை அன்று அந்த மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரது தந்தை மற்றும் மாணவியின் தம்பி இருவருடன் அந்த கிராமத்தின் பஸ் நிறுத்தம் அருகே பஸ்சுக்காக காத்திருந்துள்ளனர்.

அப்போது பேரணாம்பட்டு அருகே உள்ள சாரங்கல் கிராமத்தைச் சேர்ந்த ரஜினி வயது 45 கோழிப் பண்ணையில் வேலை செய்து வருகிறார்

அவர் அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்துள்ளார் அப்போது அவர் அந்த மாணவியின் தந்தையிடம் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார்

மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறிய போது என்னுடைய மோட்டார் சைக்கிளில் அந்த மாணவி மற்றும் அவரது தம்பியை அனுப்புங்கள் என அழைத்துக் கொண்டு மாணவியின் தம்பியை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு அந்த மாணவியை பேரணாம்பட்டில் உள்ள தனியார் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டு திரும்பினார்

வரும் வழியில் யாருமில்லாத முட்புதர் பகுதிக்கு அந்த மாணவி அழைத்துச் சென்று மிரட்டி ரஜினி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதன் பின்னர் அந்த மாணவியிடம் இது குறித்து வெளியே சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தையும் ஒழித்து விடுவேன் என மிரட்டி உள்ளார்

தொடர்ந்து திரும்பி வந்த ரஜினி மோட்டார் சைக்கிளில் அந்த மாணவி மற்றும் அவரது தம்பியை அவரது தந்தையிடம் விட்டு சென்று விட்டார்.

அதன் பின் உடல்நிலை சரியில்லாதாமல் சோர்வுடன் அந்த மாணவி இருந்துள்ளார். அப்போது அந்த மாணவியின் சகோதரி மாணவியிடம் விசாரித்த போது தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க: வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. வேடிக்கை பார்க்க சென்றவர்கள் அலறி அடித்து ஓட்டம்!!

மேலும் உடல் மிகவும் சோர்வுற்ற நிலையில் அந்த மாணவி இருந்துள்ளார் அந்த மாணவியை உடனடியாக பேரணாம்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அங்கு மருத்துவர்கள் அந்த மாணவியை பரிசோதனை செய்தபோது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது

இது குறித்து உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதிவாணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ரஜினியை போக்சோ சட்டத்தின் கீழ்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ரஜினிக்கு திருமணம் ஆகி பிள்ளைகள் உள்ளனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 856

    0

    0