திரைப்படங்களில் கேப்டன் போட்டோவை பயன்படுத்தினால் காப்புரிமை கேட்கமாட்டோம்.. மனமாறிய பிரேமலதா!
Author: Udayachandran RadhaKrishnan28 September 2024, 2:25 pm
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டோக்களை சினிமாவில் பயன்படுத்தினால் காப்புரிமை கட்டாயம் கேட்போம் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா அறிவித்திருந்தார்.
இதையடுத்து விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் விஜயகாந்த் போலவே விஜய் தோன்றியிருப்பார். இதனால் படக்குழு படம் வெளியாகும் சில நாட்கள் முன்னர் பிரேமலதாவை சந்தித்து அனுமதி பெற்றனர்.
இந்தநிலையில் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் ரசிகர்கள் வரவேற்பால் ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தில் தீவிர விஜயகாந்த் ரசிகராக வலம் வரும் நடிகர் தினேஷ் தோன்றம் போது பின்னணியில் நீ பொட்டு வெச்ச தங்க குடம் பாடல் ஒலிக்கும். அதே போல விஜயகாந்த்தின் ரெபரென்ஸ் அதிக இடங்களில் இருக்கும்.
மேலும் படிக்க: மருதமலைக்கு செல்ல எதற்கு இ-பாஸ்? பக்தர்கள் கேள்விக்கு கோவில் நிர்வாகம் விளக்கம்..!!!
இதனால் தியேட்டரில் விஜயகாந்த் பாடல் ஒலிக்கும் போது, விஜயகாந்த் புகைப்படம் வரும் போது, ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவருக்கு இதுதான் சரியான அஞ்சலி என பாராட்டி வருகிற்னர்.
இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதாக விஜயகாந்த், திரைப்படங்களில் கேப்டனின் பாடல்களை, போஸ்டர்களை பயன்படுத்தினால் காப்புரிமை கேட்கமாட்டோம், ஏனா கேப்டன் எங்க சொத்து அல்ல, மக்கள் சொத்து என கூறியுள்ளார்.