டயாபடீஸ் பிரச்சினைய ஈசியா சமாளிக்க இதெல்லாம் சாப்பிடுங்க… சைன்ஸ் கூட இத தான் சொல்லுது!!!

Author: Hemalatha Ramkumar
28 September 2024, 6:00 pm

இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது மனிதர்களை இணைபிரியாத ஒன்றாக மாறிவிட்டது. அந்த அளவுக்கு நாளுக்கு நாள் டயாபடீஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் பின்னணியில் இருக்கக்கூடிய முக்கியமான விஷயம் என்னவென்றால் டயாபடீஸ் பிரச்சனையை கட்டுப்படுத்துவதற்கு ஒருவர் தங்களது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். ரத்த சர்கரை அளவுகளை கட்டுப்படுத்துவதற்கு ஒருவர் உணவு, உடற்பயிற்சி, மன ஆரோக்கியம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒருவேளை உங்களுடைய ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது உங்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறதா? அப்படி என்றால் பீன்ஸ், பட்டாணி பருப்பு வகைகள் மற்றும் கொண்டைக்கடலை போன்றவை உங்களுடைய டயபடிஸ் பிரச்சனையை கட்டுப்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருக்கும். இது ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த பருப்பு வகைகள் அனைத்தும் கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படும் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன் (LDL) மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படும் அதிக அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன் (HDL) ஆகியவற்றிலும் நேர்மறையான விளைவுகளை கொண்டுள்ளது. இது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வில் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன், அதிக அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன், ரத்த சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் போன்றவை கண்காணிக்கப்பட்டது. மேலும் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதை தவிர்க்கவும் பருப்பு வகைகளின் பங்கு குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

பருப்பு வகைகள் நம்முடைய நீண்ட கால ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த பெரிய அளவில் உதவுகிறது. அதிலும் குறிப்பாக வகை 2 நீரழிவு நோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் பருப்பு வகைகளை தங்களுடைய உணவில் சேர்த்து வர நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் குறைந்த கொழுப்பு, ஆரோக்கியமான மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், பயோஆக்டிவ் காம்பவுண்டுகள் ஆகியவை பருப்பு வகைகளில் இருப்பதால் இது நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஒரு ஊட்டச்சத்து களஞ்சியமாக அமைகிறது.

அது மட்டுமல்லாமல் பருப்பு வகைகள் தாவர புரதத்தின் சிறந்த மூலமாக அமைகிறது. மேலும் நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் பருப்பு வகைகளில் நிறைந்திருக்கிறது. இது தவிர சிங்க், இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளது. எனவே தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்து மூலங்களை சாப்பிட நினைப்பவர்களுக்கு இந்த பருப்பு வகைகள் உதவியாக இருக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • members in tn assembly discussed about kadhalikka neramillai movie இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?