தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது. இன்னும் ஒரு மாதம் ரிலீஸ் இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்: என்ன இப்படி இறங்கிட்டீங்க…? கவர்ச்சி உடையில் கடல் கன்னி போல் இருக்கும் கீர்த்தி சுரேஷ்!
இந்த சூழலில் அமரன் திரைப்படத்தின் விழாவில் நடிகை சாய் பல்லவி சூர்யாவின் காட்டு பயலே திரைப்படத்திற்கு நடனம் ஆடி இருக்கிறார். மேடையில் நடனமாடிய சாய் பல்லவியை அருகில் அமர்ந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் அவரை கண் கொட்டாமல் பார்த்து ரசிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.