நகங்களின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ள சில சீக்ரெட்ஸ் இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
30 September 2024, 3:31 pm

பெரும்பாலான நேரங்களில் நம்முடைய நகங்களை நாம் கவனிப்பதே இல்லை. ஆனால் நகங்களின் சுகாதாரம் என்பது நம்முடைய ஒட்டுமொத்த அழகு மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. உங்களுடைய நகங்களை சுத்தம் செய்து அதனை சரியாக பராமரித்து வருவது நகங்களின் சுகாதாரத்திற்கும் அதன் அழகை மேம்படுத்துவதற்கும் அவசியமானது. ஆகவே நகங்களை சுத்தமாக வைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அழுக்கான நகங்களில் பாக்டீரியாக்கள் எளிதாக நுழைவதற்கான வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் அழுக்கான நகங்கள் காண்போரை முகம் சுளிக்க வைக்கலாம். சுத்தமான மற்றும் ஆரோக்கியமான நகங்களை பராமரிக்க உதவும் ரகசியங்கள் இதோ உங்களுக்காக!

வழக்கமான முறையில் நகங்களை வெட்டுங்கள். உங்கள் நகங்களை சுத்தமாக வைப்பதற்கு இருக்கும் மிக எளிமையான வழியில் இது ஒன்று. நீளமான நகங்களில் அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் சேர்ந்து அதனை சுத்தம் செய்வதை கடுமையாக்குகிறது. நல்ல தரமான நகவெட்டியை பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உங்களுடைய நகங்களை வெட்டி அதன் ஓரங்களை மென்மையாக ஃபைலிங் செய்யுங்கள்.

உங்களுடைய நகங்களுக்கு அடியில் இருக்கும் அழுக்கு மற்றும் தூசுகளை அகற்றுவதற்கு தினமும் அதனை சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் கைகளை கழுவும் போது இதனை நீங்கள் செய்யலாம். ஆனால் உங்கள் நகங்களுக்கு அடியில் கூர்மையான பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். இது நக படுக்கையை சேதமாக்கி தொற்றுகளை ஏற்படுத்தலாம்.

உலர்ந்த, எளிதில் உடையக்கூடிய நகங்களில் அழுக்குகள் சேருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே உங்களுடைய நகங்களுக்கு தேவையான ஈரப்பதத்தை நீங்கள் வழங்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமாக உங்கள் நகங்களின் வலிமை அதிகரிக்கும். ஹேண்ட் லோஷன் பயன்படுத்தும் பொழுது உங்களுடைய கைகளில் உள்ள நகங்களுக்கும் அதனை உபயோகிப்பது அதற்கு தேவையான போஷாக்கை வழங்கும். வைட்டமின் ஈ, ஜோஜோபா எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற பொருட்களாலான லோஷனை பயன்படுத்துவது இன்னும் கூடுதல் பலன்களை அளிக்கும். இந்த கிரீமை பயன்படுத்திய பிறகு லேசான மசாஜ் செய்வது அங்குள்ள ரத்த ஓட்டத்தை அதிகரித்து, நகங்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

நகங்களை ஒருபோதும் கடிக்காதீர்கள். இது கெட்ட பழக்கம். இவ்வாறு செய்வதால் நேரடியாக உங்கள் வாய் மூலமாக பாக்டீரியாக்கள் உங்கள் உடலுக்குள் சென்று அதனால் தொற்றுகள் ஏற்படும். அது மட்டுமல்லாமல் இதனால் உங்களுடைய நக படுக்கை சேதமடைந்து அது வலியை உண்டாக்கலாம்.

எப்பொழுதும் நகங்களில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருந்தால் உங்களுடைய நகம் எளிதில் உடையக்கூடும். எனவே உங்களுடைய நகங்களை முடிந்த அளவு உலர்ந்த நிலையில் வையுங்கள். குறிப்பாக உங்கள் கைகளை கழுவிய பிறகு அல்லது உங்கள் கைகளுக்கு தண்ணீர் பயன்படுத்திய பிறகு கைகளை சுத்தமான தூண்டு ஒன்றில் துடைத்துக் கொள்ள மறக்காதீர்கள். பாத்திரம் கழுவுதல் அல்லது துணி துவைத்தல் போன்ற வேலைகளை செய்யும் பொழுது உங்கள் கைகளில் கிளவுஸ் பயன்படுத்தலாம்.

தவறான நக ப்ராடக்டுகளை பயன்படுத்துவதால் நகங்களின் நிறம் மாறி அது சேதத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது. எனவே எப்பொழுதும் நச்சு இல்லாத, நல்ல தரமான நெயில் பாலிஷ் மற்றும் ரிமூவர்களை பயன்படுத்துங்கள்.

அவற்றில் மோசமான கெமிக்கல்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு அவற்றை பயன்படுத்துங்கள். மேலும் தினமும் உங்கள் வழக்கங்களில் நெயில் பாலிஷ் வைக்காமல் அவ்வப்போது அதற்கு பிரேக் கொடுப்பது நகங்களின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும்.

உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை உங்கள் நகங்களை வைத்தே சொல்லிவிடலாம். எனவே சரிவிகித உணவை சாப்பிடுவது மிகவும் அவசியம். நீங்கள் சாப்பிடும் உணவில் போதுமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். பச்சை இலை காய்கறிகள், கீரை வகைகள், நட்ஸ் வகைகள், முட்டை மற்றும் மீன் போன்றவை நகங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பது மட்டுமல்லாமல் உங்கள் உடலுக்கு வலு சேர்ப்பதற்கு உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Lady Super Star Box Office 3000 Crores Collection சூப்பர் ஸ்டார் கூட வசூல் பண்ண முடியாது.. ரூ.3,000 கோடி வசூல் செய்த லேடி சூப்பர் ஸ்டார்!!
  • Views: - 304

    0

    0