அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்.. ஜாமீன் ரத்தாகும் வாய்ப்பு : உச்சநீதிமன்றத்தில் பரபர!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2024, 6:31 pm

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய வழக்கில் கடந்த வருடம் ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து பல முறை ஜாமீன் கேட்டும் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அன்று இரவே ஜாமீனில் வெளியான செந்தில் பாலாஜிக்கு திமுகவினர், ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

எந்த துறையை கவனித்தாரோ மீண்டும் அதே இலாக்கக்களை வழங்கினார் முதலமைச்ச் ஸ்டாலின். நேற்று ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க தலைமை செயலகம் சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்புகளை ஏற்றார்.

நிபந்தனை ஜாமீன் பெற்று அமைச்சரான பின் முதன்முறையாக இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட ஆஜராகி விட்டு சென்றார்.

இந்த நிலையில் இன்று செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கு விசாரணைக்கு வந்த போது, அவர் அமைச்சராக இல்லை எனவே சாட்சியை கலைக்கமாட்டர் என்று தான் ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால் அவர் மீண்டும் அமைச்சராகிவிட்டதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் கோரினார்.

இதைக் கேட்ட நீதிபதி ஓகா, ஜாமீனை மறுபரிசீலானை செய்வதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய கூறியுள்ளார்.

இதனால் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்து வெளியான வேகத்திலேயே அமைச்சர் பதவி ஏற்றதால் அவரது ஜாமீனுக்கு சிக்கல் என கூறப்படுகிறது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 187

    0

    0