கோயிலுக்குள் நுழைந்த பெரியார்? கரூர் திமுகவில் வினோத கூத்து : முன்னாள் எம்எல்ஏ நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் !!
Author: Udayachandran RadhaKrishnan1 October 2024, 12:54 pm
திமுக முன்னாள் எம்எல்ஏ நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் கரூரில் வைரலாகியுள்ளது.
தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு மாவட்டங்களில் திமுக உறுப்பினர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயிரத்தில் ஒருவர் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளருமான, முன்னாள் திமுக எம்எல்ஏ காமராஜ், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆனதை அடுத்தும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயிரத்தி இருவர் துறை அமைச்சருமானதை தொடர்ந்து மாரிம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
கோயில் வளாகத்திற்குள் வைக்கப்பட்ட பேனரில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய பிளக்ஸ், அதனைத் தொடர்ந்து முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் புகைப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் அதன் முன்னர் பக்தர்கள் மற்றும் திமுகவினருக்கு முன்னாள் எம்எல்ஏ காமராஜ் அன்னதானம் வழங்கினார்.
திமுக கட்சியின் மத்திய மேற்கு நகரச் செயலாளர் ஜோதிபாசு உள்ளிட்ட ஏராளமானார் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், சர்ச்சையை இந்த பிளக்ஸ் தான், தமிழக அளவில் தந்தை பெரியாருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக அரசும், திமுக வினரும் ஆலயத்திற்குள் பெரியார் பிளக்ஸ் அடங்கிய செயல் தமிழக அளவில் ஆன்மீக அன்பர்கள் மட்டும் இல்லாமல் பெரியார் உணர்வாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது