ஆளுநர் பங்கேற்றதால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கவில்லை… திமுக அமைச்சரின் திடீர் விளக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2024, 5:47 pm

அதிமுக வாக்கு வங்கி இனி ஏறாது, இருக்கறத காப்பாத்தினாலே போதும் என திமுக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை காந்தி சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு தொண்டனின் குரலாக தான் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக வேண்டும் என்பது ஒட்டுமொத்த திமுக தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட துணை முதல்வர் தான் உதயநிதி ஸ்டாலின் ஒரு சிறு சலசலப்பு எதிர்ப்பு இல்லாமல் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுள்ளார். அவரால் திமுக புத்துயிர் பெறும் வளர்ச்சி பெறும்

முதல்வரின் கூற்றுப்படி வரும் சட்டமன்ற தேர்தலில் 200 என்ற இலக்கை அவருடைய உழைப்பால் பெற்று விடுவோம்.

காந்தி மண்டபம் முறையாக பராமரிக்கப்படவில்லை என ஆளுநர் கூறும் குற்றச்சாட்டு தவறானது. ராத்திரியில் நடைபெறும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது.

நாங்கள் காந்தி மண்டபம் உள்ளிட்ட கடற்கரை சாலைகளில் உள்ள முக்கிய இடங்களில் தினந்தோறும் மாநகராட்சி சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

திருடர்கள் சுவர் ஏறி குதித்து இரவில் திருடினால் அதற்கு நாங்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும். சென்னையில் மழை பெய்தவுடன் இடுப்பளவு தண்ணீர் இருந்தாலும் உடனடியாக அது சென்று விடுகிறது இதைத்தான் நாங்கள் சொல்கிறோமே தவிர மழை மழை பெய்தால் தண்ணீர் தேங்காது என்று நாங்கள் எப்போதும் கூறவில்லை. ஒரு மணி நேரத்திற்குள் அந்த நீர் வடிகால் வழியாக சென்று விடும்

எடப்பாடி பழனிச்சாமி மீது செல்போன் வீசப்பட்டதா விழுந்ததா என்று அவர்களே இன்னும் உறுதியான முடிவை சொல்லவில்லை அவர் புகார் வந்தால் அது குறித்து அவர்கள் சொன்னால் பார்க்கலாம்

அதிமுக ஐடிவிங் கூட்டம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தி விடாது. அதிமுகவின் வாக்கு இன்னும் குறையை தான் செய்யும் இருக்கின்ற வாக்கை அவர்கள் தக்க வைத்தால் போதும் .

பாஜகவை கடுமையாக எதிர்த்ததால் மனோ தங்கராஜ் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்பது தவறானது அதேபோல ஆளுநரிடம் மோதல் போக்கு இருந்தால் அவரின் பதவி மாற்றம் செய்யப்பட்டது என்பதும் தவறானது

இதேபோன்றுதான் அமைச்சர் பொன்முடி விவகாரத்திலும் உயர்கல்வித்துறை ஒரு பட்டியல் இனத்து ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் இன்றைய தினம் உயர்கல்வி துறையை பட்டினத்து அமைச்சருக்கு கொடுத்துள்ளார்.
இந்த மாற்றத்தின் மூலமாக அந்த குற்றச்சாட்டை முதல்வர் உடைந்து விட்டார்

சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஆளுநருக்காக நான் புறக்கணிக்கவில்லை நான் புறக்கணிப்பதாக இருந்தால் கடந்த ஆண்டு புறக்கணித்திருப்பேன் எனக்கு வேறு பணிகள் இருந்ததால் நான் இந்த ஆண்டு அதில் கலந்து கொள்ள இயலவில்லை.

அமைச்சரவை பதவி ஏற்பின் போது ஆளுநர் முதல்வரின் கார் வரை வந்து வழி அனுப்பி வைத்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள் தமிழகத்தில் சிறைச்சாலைகள் மிகுந்த பாதுகாப்போடு உள்ளன.

புதுக்கோட்டையில் கடந்த சிலங்களுக்கு முன்பு குடிநீர் ஏற்பட்ட கோளாறு காரணமாக கைதிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது அது சீர் செய்யப்பட்டு விட்டது. கைதிகளுக்கு உணவுகள் முறையாக பாதுகாப்பான உணவாக தான் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 638

    0

    0