என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2024, 7:55 pm

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் புதிய கட்சி ஆரம்பிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்,

இதற்காக இன்று புதிய கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு ஜன் சூராஜ் கட்சி என பெயர் சூட்டியுள்ளார். ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை இன்று தொடங்கினார். மேலும், 2025 சட்டசபை தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி போட்டியிடும் எனவும், ஆட்சி அமைந்தால் மது விலக்கை ரத்து செய்து மதுக்கடைகளை திறப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி