தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்!!!

Author: Hemalatha Ramkumar
2 October 2024, 6:37 pm

குழந்தை பெற்ற தாய்மார்கள் சரியான ஊட்டச்சத்து எடுத்தால் மட்டுமே அவர்களுக்கு தேவையான பால் சுரப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பால் மூலமாக கிடைக்கும். அப்படி இருக்க தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் புரிந்து கொள்ளலாம். 

“நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அதுதான் நாம்” என்ற வாக்கியத்தை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். ஆனால் தாய்ப்பால் ஊட்டுதல் என்று வரும் பொழுது “நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ, அதுவே உங்கள் குழந்தை” என்பது போல் ஆகிறது. ஆகவே உங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியான வகையில் கிடைப்பதற்கு நீங்கள் போதுமான அளவு ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது அவசியம். 

நீங்கள் தாய்ப்பால் ஊட்டும் பொழுது உங்கள் உடலானது குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இரவும் பகலமாக தாய்ப்பாலை உற்பத்தி செய்கிறது.  அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கிய சரிவிகித உணவை சாப்பிடுவது உங்களுடைய ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், தாய்ப்பாலில் உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான போஷாக்கு இருப்பதை உறுதி செய்கிறது.

தாய்ப்பாலூட்டலுக்கான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் 

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் தங்களுடைய உணவில் இரும்பு சத்து, கால்சியம், புரோட்டின் மற்றும் ஃபோலேட் போன்ற முக்கியமான சில ஊட்டச்சத்துக்கள் கட்டாயமாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த ஊட்டச்சத்துக்கள் உங்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் உங்களுடைய குழந்தைக்கு தேவையான போஷாக்கை தாய்ப்பால் மூலமாக வழங்குகிறது. 

வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் 

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சூப்பர் ஸ்டார் ஊட்டச்சத்துகளாக கருதப்படுகிறது. வைட்டமின் டி என்பது உங்கள் உடலில் உள்ள கால்சியம் அளவுகளை சீராக்கவும், அதே நேரத்தில் உங்களுடைய குழந்தையின் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை வளர்ச்சி மற்றும் உங்களுடைய மனநலனை மேம்படுத்துவதால் நீங்கள் மகிழ்ச்சியோடு உங்கள் குழந்தையை கவனித்துக் கொள்வீர்கள். 

நீர்ச்சத்து மற்றும் பால் உற்பத்தியில் அதன் தாக்கம் 

ஆரோக்கியமான முறையில் பால் சுரப்பதற்கு நீங்கள் போதுமான அளவு நீர்சத்தை கொண்டிருக்க வேண்டும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் மட்டுமே உங்கள் உடலால் திரவ தங்கம் அல்லது தாய்ப்பாலை உற்பத்தி செய்ய முடியும். 

நீர்ச்சத்து இழப்புக்கான அறிகுறிகள் மற்றும் பால் உற்பத்தியில் அதன் விளைவுகள் 

வறண்ட வாய் மற்றும் மஞ்சள் நிற சிறுநீர் ஆகியவை உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதை உறுதி செய்வதற்கான சில அறிகுறிகள். ஆகவே நீர்ச்சத்து இழப்பும் உங்களுடைய பால் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக மறவாதீர்கள். 

தாய்ப்பால் ஊட்டுதலுக்கு ஆதரவு தரும் வகையில் சரிவிகித உணவுக்கான திட்டமிடல் 

உங்களுடைய உணவு எப்பொழுதும் போர் அடிக்கும் விதமாக இருக்கக் கூடாது. உங்கள் தட்டில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். இதன் மூலமாக உங்களுடைய உடலுக்கு தேவையான போஷாக்குகள் கிடைத்து உங்களுடைய பாலூட்டும் பயணம் சிறப்பாக அமையும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 223

    0

    0