தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து 2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் பிரபலமான ஹீரோவாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் அரவிந்த்சாமி. பெண்களின் பேவரைட் ஹீரோவாக ஹேண்ட்ஸ்ம் லுக்கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அரவிந்த்சாமி இன்றும் பலரின் பேவரைட் ஹீரோ தான்.
அவரது நடிப்பில் வெளிவந்த வெற்றி திரைப்படங்களான ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம் ,அலைபாயுதே போன்ற திரைப்படங்கள் இன்றளவும் பலரது பேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் அரவிந்த்சாமி கிட்டத்தட்ட 57 வயதாகியும் கூட தற்போது வரை ஹேண்ட்ஸம் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.
தொடர்ச்சியாக கிடைக்கும் பட வாய்ப்புகளில் முக்கியமான கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அரவிந்த்சாமியிடம் இன்னும் அரவிந்த்சாமி போல மாப்பிள்ளை வேணும் என பல பெண்கள் கேட்கிறார்களே அதற்கு என்ன சொல்கிறீர்கள் என கேட்டதற்கு…
இதையும் படியுங்கள்: விஜய் அரசியலுக்கு போய்ட்டாரு… அடுத்த தளபதி நான்? நடிகர் கவின் நறுக் பதில்!
திரைப்படங்களில் ஒருவர் ஏற்கும் கதாபாத்திரத்தை வைத்து அவர் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பார் என நினைத்து விடுகிறார்கள். அப்படித்தான் முதலில் நான் செய்த கதாபாத்திரங்களை வைத்து என்னை போல் மாப்பிள்ளை வேண்டும் என பேச தொடங்கினார்கள். ஆனால் உண்மையில் என்னை பற்றியும் நான் யாரென்றும் தெரிந்தால் அப்படி ஆசைப்படவே மாட்டார்கள் என தன்னுடைய உண்மையான கேரக்டரை மறைமுகமாக கூறியிருக்கிறார் நடிகர் அரவிந்த்சாமி.