எனக்கே கொலை மிரட்டலா? நான் நெல்லைக்காரன்… இதுக்கெல்லாம் பயப்படமாட்டேன் : மதுரை ஆதீனம்!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2024, 4:59 pm

வைகையாற்றை சுத்தம் செய்வதாக கூறி தன்னிடம் வந்து காசு கேட்டு கொலை மிரட்ட விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஆட்சியருக்கு மதுரை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசும் போது, என்னிடம் வைகையை சுத்தப்படுத்த வேண்டும் என ஒரு நாளைக்கு 15 ஆயிரம் கொடுங்கள் என்று சொன்னார்கள். அரசாங்கமே செய்ய வேண்டும் உங்களால் முடியாது என்று சொன்னேன்.

காசு எதற்கு என கேட்டபோது இந்த பணம் கூட கொடுக்க முடியவில்லை, எதற்கு மடம் இருக்கிறது உனக்கு தகுதி இல்லை என என்னை கூறினார்கள்.

பத்து நோட்டீசை கொண்டு வந்தார்கள். அவர்கள் என்னை பார்க்க வந்த முறையே தவறு அவர்கள் நடவடிக்கை சந்தேகமாக இருந்தது. அவர்களின் செயல்பாடு சந்தேகமாக இருந்தது.

இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறேன். வைகையாற்றை மக்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்னை மிரட்டியவர் தொடர்பாக புகார் மனு கொடுக்க விரும்பவில்லை.

இதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம். ஏச்சு பேச்சி எல்லாம் எவ்வளவு வாங்கி விட்டேன் இதெல்லாம் துடைத்துவிட்டு போய் விடுவேன், இது எனக்கு தூசி எவ்வளவோ மிரட்டியிருக்கிறார்கள்.

இதையும் படியுங்க: சிறுபான்மையினரை இழிவுப்படுத்தினாரா துணை முதலமைச்சர் : கமிஷ்னர் அலுவலகத்தில் பரபர புகார்!

என்னை அரிவாளால் வெட்டவெல்லம் வந்திருக்கிறார்கள் இதற்கெல்லாம் நான் பயந்தவன் அல்ல நான் பிறந்ததே நெல்லை மாவட்டம். திருவாரூர் என்ற பெயரில் தஞ்சாவூர் காரர்கள் வந்து எங்களை மிரட்டுகிறார்கள் நான் திருநெல்வேலிக்காரன் வெள்ளக்காரன் ஓட ஓட விரட்டியவங்க.

அவர்கள் என்னை என்ன செய்து விடுவார்கள் அதனால் தான் நான் காவல்துறையினரிடம் புகார் அளிக்க போகவில்லை என்ன செய்வார்கள் என பார்ப்போம் போனால் போகிறது உயிர் தானே.எப்படியாவது மிரட்டி பணம் வாங்கி விடலாம் என்பதற்காக வந்தார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 348

    0

    0