நெஞ்சு வலி என்றாலே அது ஹார்ட் அட்டாக்கா… இதய நோய் பற்றி நீங்கள் அறிய வேண்டிய கட்டுக்கதைகள்!!!

Author: Hemalatha Ramkumar
7 October 2024, 1:37 pm

அதிக கொலஸ்ட்ரால், அதிக ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சனைகள் இன்று அதிக அளவில் காணப்படுகிறது. முன்னதாக இது மாதிரியான பிரச்சனைகள் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது இளைஞர்களையும் பாதிக்க ஆரம்பித்து விட்டது. இது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் குழந்தைகளுக்கு கூட தற்போது ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. இதய நோய் என்பது உலக அளவில் மில்லியன் கணக்கான நபர்களை ஒவ்வொரு ஆண்டும் கொன்று வரும் ஒரு கொடூரமான நோயாக அமைகிறது. இந்த நோய் பற்றிய பரவலான தகவல்களை நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். ஆனால் இது குறித்த ஒரு சில கட்டுக்கதைகளும் நிலவி வருகிறது. அவற்றை தெரிந்து கொண்டால் மட்டுமே இதய ஆரோக்கியத்தை ஒருவரால் மேம்படுத்த முடியும். அந்த வகையில் இதய ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு சில கட்டுக்கதைகள் என்னென்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். 

முதல் கட்டுக்கதை:

இதய நோய் வயதானவர்களை மட்டுமே பாதிக்கும். 

உண்மை என்னவென்றால் இதய நோய் என்பது அனைத்து வயதினரையும் பாதிக்கலாம். குடும்ப வரலாறு, உடற்பருமன், புகைபிடித்தல் மற்றும் போதுமான உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் ஏற்படும் என்பதால் இதய நோய் அனைத்து வகை வயதினரையும் தாக்கலாம். 

இரண்டாவது கட்டுக்கதை: இதய நோய் ஆண்களுக்கான ஒரு நோய் 

சொல்லப்போனால் இதய நோய் என்பது பெண்களில் ஏற்படும் உயிரிழப்புகளில் முன்னணி காரணமாக அமைகிறது. மூன்றில் ஒரு பெண் இதய நோயால் இறந்து போகிறாள். ஆண்களை விட பெண்களுக்கான இதய நோய் அறிகுறிகள் முற்றிலும் வேறுபட்டவை. இதன் காரணமாக இது பெண்களில் தாமதமாக கண்டறியப்படுகிறது. 

மூன்றாவது கட்டுக்கதை: நெஞ்சு வலி என்றாலே அது ஹார்ட் அட்டாக்காக தான் இருக்கும்.

ஹார்ட் அட்டாக் பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களில் 50 சதவீத நபர்கள் நெஞ்சுவலியை அனுபவிக்கின்றனர். எனினும் மீதமுள்ளவர்கள் மூச்சுத்திணறல், சோர்வு அல்லது தோள்பட்டை, முதுகு அல்லது தாடை பகுதியில் வலியை அனுபவிக்கின்றனர். 

மேலும் படிக்க: உங்க சருமத்த வெண்மையாக்க ஒரு கிண்ணம் தயிர் இருந்தா போதும்!!!

நான்காவது கட்டுக்கதை: இதய நோய் முழுக்க முழுக்க மரபணு காரணமாக ஏற்படுகிறது. 

புகைப்பிடித்தல், உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது மற்றும் மோசமான உணவு போன்றவை இதய நோய் ஏற்படுவதற்கான காரணங்களில் அடங்கும். எனவே மரபணு காரணமாக மட்டுமே இதய நோய் ஏற்படாது. 

ஐந்தாவது கட்டுக்கதை: இதய நோயை தடுக்க முடியாது. 

இதய நோய்கள் ஏற்படுவதை நம்மால் 80% தடுக்க முடியும். அதற்கு பின்வரும் விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும்:- 

வழக்கமான உடற்பயிற்சி (ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள்) 

சரிவிகித உணவு (பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் நிறைந்த உணவு) 

மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் (தியானம், யோகா, ஆழ்ந்த மூச்சு பயிற்சி) 

புகை பிடிப்பதை கைவிடுவது 

அவ்வப்போது ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கண்காணிப்பது 

ஆறாவது கட்டுக்கதை:

ரத்த அழுத்தம் நார்மலாக இருந்தால் இதய நோய் ஏற்படாது. 

டயாபட்டீஸ், உடற்பருமன் மற்றும் குடும்ப வரலாறு போன்றவை காரணமாகவும் இதய நோய் ஏற்படலாம். 

ஏழாவது கட்டுக்கதை: இதய நோய்க்கு எப்பொழுதுமே அறுவை சிகிச்சை அவசியம். 

வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்து மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற செயல்முறைகள் மூலமாகவும் பலவிதமான இதய நோய்களை கட்டுப்படுத்தலாம். 

இதய நோய் என்பது தவிர்க்க கூடியது மற்றும் அதற்கு சரியான சிகிச்சை அளித்தால் நிச்சயமாக நோயிலிருந்து மீண்டு வரலாம். இதய நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வது, ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றுவது மற்றும் அவ்வப்போது உடல் பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலமாக இதய நோய் ஏற்படுவதை தவிர்த்து நம்முடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 192

    0

    0