Bigg Boss வீட்டில் தஞ்சம் அடைந்த கள்ளக்காதல் ஜோடி… வெளுத்து வாங்கிய முன்னாள் மனைவி!

Author:
7 October 2024, 4:12 pm

பிரபல சீரியல் நடிகரான அர்னவ் கேளடி கண்மணி சீரியலில் தன்னுடன் சேர்ந்து நடித்த சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரகசியமாக இவர்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில் திவ்யா அர்னவ்வினால் கர்ப்பமாகி ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தனர் .

இப்படி இருந்த சமயத்தில் திவ்யா கர்ப்பமாக இருந்தபோது அர்னவ் தன்னுடன் நடித்த சீரியல் நடிகை அன்ஷிகா உடன் தகாத உறவு வைத்துக் கொண்டு அவருடன் கள்ளக்காதல் உறவில் இருந்து வந்துள்ளார். இந்த விஷயம் நடிகை. திவ்யாவுக்கு தெரிய வர திவ்யா இது குறித்து புகார் அளித்து தன்னுடைய கணவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் பாலியல் புகார் அவர் மீது அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

bigg boss arnav

அர்னவ்வை என்னிடமிருந்து சீரியல் நடிகையான அன்ஷிதா பிரிந்துவிட்டார் என்று பகீர் குற்றச்சாட்டு கிளப்பியிருந்தார். சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற இந்த சர்ச்சையான சம்பவத்தின் போது பேட்டியளித்திருந்த சீரியல் நடிகை திவ்யா என்னுடைய கணவர் கள்ள காதலி உறவில் இருந்து கொண்டு எனக்கு போன் செய்து நான் இவளை தான் காதலிக்கிறேன் இவளை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் உன்னால் என்ன செய்ய முடியும்? என்று கேள்வி கேட்கிறார்.

அதேபோல் அன்ஷிதாவும் என்னுடைய கணவர் அர்னவ்விற்கு ஐ லவ் யூ எனக்கூறி முத்தம் கொடுத்து என்னை வெறுப்பு ஏற்றி இருந்தார் என பகீர் குற்றச்சாட்டை கிளப்பி இருந்தார். இந்த விஷயம் பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அன்ஷிதா மற்றும் அர்னவ் இருவரும் சேர்ந்து சீரியல் நடித்திருந்தது மேலும் பரபரப்பு ஏற்படுத்தியது. இப்படி இருக்கும் சமயத்தில் தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி இருக்கும் நிலையில் அதன் போட்டியாளர்களாக அர்னவ் மற்றும் அன்ஷிதா இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

arnav

ஏற்கனவே இந்த கள்ள காதல் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சமயத்தில் அர்னவ்வின் முன்னாள் மனைவி ஆன திவ்யா அந்த பிரச்சனையின் போது பத்திரிகையாளரிடம் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: ஆளும் புதுசு… ஆட்டமும் புதுசு: ஆனால் Contestants….? அதிருப்தியில் ஆடியன்ஸ்!

இதை பார்த்து நெட்டிசன்ஸ் பலரும் இப்படிப்பட்ட நபர்களையா பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக போடுவது? விஜய் டிவிக்கு விவஸ்தையே இல்லையா? TRP’க்காக மோசமான சர்ச்சை கிளப்பும் போட்டியாளர்களை நியமிப்பதற்கும் ஒரு எல்லை வேண்டாமா? என விமர்சித்து வருகிறார்கள்.

  • Surya Retro Movie OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
  • Views: - 350

    0

    0