செம்பருத்தி பூ தேநீர்: அழகும் ஆரோக்கியமும் ஒரே இடத்தில்!!!

Author: Hemalatha Ramkumar
7 அக்டோபர் 2024, 7:04 மணி
Quick Share

செம்பருத்தி பூக்களை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். ஆனால் இந்த செம்பருத்தி பூக்களால் செய்யப்பட்ட தேநீரை பருகுவதன் மூலமாகவும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நம்ப முடியாத அளவுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இது உங்களுடைய அன்றாட வழக்கத்தில் சேர்க்க வேண்டிய ஒரு பானமாக அமைகிறது. ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் நமது உடலுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் நிறைந்த செம்பருத்தி பூ தேநீர் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. சரும ஆரோக்கியத்தை அதிகரிப்பது முதல் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவது வரை செம்பருத்தி பூ தேநீர் குடிப்பதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. அவற்றை இப்போது ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளலாம். 

செம்பருத்தி பூ தேநீர் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வேலையை செய்கிறது. கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் செம்பருத்தி பூ தேநீர் குடித்து வந்தால் அது அவர்களுடைய கல்லீரலின் இயற்கையான செயல்பாட்டை தூண்டி, கழிவு நீக்க செயல்முறை சிறந்த முறையில் நடைபெறவதற்கு உதவும். இது உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் அகற்றுகிறது. ஆனால் இதற்கு நீங்கள் செம்பருத்தி பூ தேநீரை தினமும் பருக வேண்டும். 

சருமத்தின் நண்பர் போல திகழ்கின்ற செம்பருத்தி பூ  தேநீரில் ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் இருப்பதால் நமது சருமத்திற்கு சேதத்தை ஏற்படுத்தி வயதான அறிகுறிகளை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக சண்டை போடுகிறது. வழக்கமான தேநீருக்கே பதிலாக செம்பருத்தி பூ தேநீர் குடித்து வந்தால் தெளிவான மற்றும் மினுமினுப்பான மேனியை பெறலாம். மேலும் இது உங்களை இளமையாக வைத்திருக்கவும் உதவும். 

வைட்டமின் சி நிறைந்த செம்பருத்தி பூ தேநீர் நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதற்கு அற்புதமான ஒரு பானம். தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக சண்டை போடும் நமது உடலின் திறனை மேம்படுத்துவதற்கு அவசியமான ஆன்டி ஆக்சிடன்ட் செம்பருத்தி பூ தேநீரில் உள்ளது. அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த தேநீர் ஒரு சிறந்த வீட்டு மருந்து. 

ஆந்தோசயானின்கள் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகமாக உள்ள செம்பருத்திப்பூ தேநீர் நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதை தவிர்க்கிறது. இந்த ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நமது உடலில் உள்ள செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது. இதனை தினமும் குடித்து வந்தால் உங்களுடைய மொத்த ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க: மழைக்காலத்துல ரத்த சர்க்கரை அளவ குறைக்க பிராக்டிக்கலா என்ன செய்யலாம்னு தெரிஞ்சுக்குவோமா…??? 

ஒருவேளை நீங்கள் வயிற்று உப்புசம், மலச்சிக்கல் போன்ற செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அனுபவித்து வருகிறீர்கள் என்றால் செம்பருத்திப் பூ தேநீர் உங்களுக்கான சிறந்த மருந்து. இதில் உள்ள இயற்கையான செரிமான பண்புகள் வயிற்றை ஆற்றி செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது. ஆரோக்கியமான குடலை பராமரித்து செரிமானத்தை ஊக்குவிக்க தினமும் செம்பருத்தி பூ தேநீர் பருகுங்கள். 

உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு பலர் பல்வேறு விதமான  முயற்சிகளில் ஈடுபடுவார்கள். உடல் எடை குறைக்கும் உங்கள் பயணத்தில் இந்த செம்பருத்தி பூ தேநீரையும்  சேர்த்துக் கொள்வது நிச்சயமாக நல்ல பலன் அளிக்கும். இது உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து, நமது உடலில் கொழுப்பு செல்கள் சேகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. மேலும் செம்பருத்திப் பூக்களில் காணப்படும் காம்பவுண்டுகள் பசியை  கட்டுப்படுத்துவதால் நம்முடைய நாம் குறைவான கலோரிகளை சாப்பிடுவோம். இதனால் உடல் எடையை எளிதில் குறைத்து விடலாம். 

ஆகவே உங்களுடைய ஆரோக்கியத்தை எளிமையான முறையில் கவனித்துக் கொள்ள நினைப்பவர்கள் செம்பருத்தி பூ தேநீரை தினமும் பருகலாம். இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானமாக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியம் மற்றும் அழகு சார்ந்த நன்மைகளையும் அளிக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Vaithilingam ரூ.27 கோடி லஞ்சமா? ஓபிஎஸ் அணி நிர்வாகி இடங்களில் ED சோதனை!
  • Views: - 123

    0

    0