மாயமான 6 வயது சிறுமி சடலமாக மீட்பு… விசாரணையில் சிக்கிய பெண் : கதறிய குடும்பம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2024, 12:03 pm

கடனை திரும்ப கேட்டதால் 6 வயது சிறுமியை கடத்தி சென்று கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் உபேதுல்லா காலனியில் வசிக்கும் அசன்துல்லா – சானியா தம்பதியினருக்கு அஸ்வீயா என்ற 6 வயது மகள் உள்ளார்.

அசன்துல்லா அதே பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கு கடன் கொடுத்துள்ளார். ஆனால் கடன் பெற்ற பெண் வட்டியும் கொடுக்காமல் கடன் தொகையை கட்டாமல் இருந்ததால் அசன்துல்லா பணத்தை கேட்டு வந்துள்ளார்.

இதனால் பணம் வாங்கிய பெண் தனது உறவினர்கள் உதவியுடன் அசன் துல்லா மகள் வீட்டின் வெளியே கடந்த 1 ம் தேதி இரவு விளையாடி கொண்டுருந்தார். ஆனால் வீட்டின் வெளியே இருந்த குழந்தை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அஸ்வியாவை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசாருக்கு புகார் அளித்தனர்.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ்லு வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில் இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் சித்தூர் மாவட்ட எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் 12 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த விசாரனையில்
அஸ்மத்துல்லாவிடம் கடன் வாங்கிய பெண் கடனைத் தீர்க்குமாறு அஸ்மத்துல்லா தொடர்ந்து கேட்டு வந்ததால் அவரது ​​ மகளை உறவினர்களுடன் சென்று திட்டமிட்டு கடத்தி சென்று கொலை செய்து ஏரிக்கால்வாயில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இரண்டு பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் உள்துறை அமைச்சர் அனிதா அஸ்வியா பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் இதனை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…