உங்க தலைமுடி பிரச்சினை எல்லாத்தையும் சால்வ் பண்ண கிரீன் டீ பவுடர்!!!

Author: Hemalatha Ramkumar
8 October 2024, 12:17 pm

தூளாக அரைக்கப்பட்ட கிரீன் டீ பவுடர் மாட்சா (Matcha) என்று அழைக்கப்படுகிறது. இது பல காலமாக அதன் ஆரோக்கிய நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மாட்சா உங்களுடைய தலைமுடிக்கும் ஏகப்பட்ட நன்மைகளை வழங்கும் என்று உங்களுக்கு தெரியுமா? ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாட்சா தலைமுடியின் ஆரோக்கியத்தை நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு மேம்படுத்துகிறது. இப்போது தலைமுடிக்கு மாட்சா பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

தலைமுடி வளர்ச்சி

தலைமுடி வளர்ச்சியை இயற்கையாக அதிகரிப்பதற்கான ஒரு தீர்வை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் உங்களுக்கு மாட்சா ஒரு ரகசிய கருவியாக அமைகிறது. எபிகேலக்டோகேட்டச்சின் கேலேட் என்ற காம்பவுண்ட் மாட்சாவில் உள்ளது. இது மயிர்க்கால்களை தூண்டுகிறது. இதனால் மயிர்க்காய்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, புதிய முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தலைமுடி மெலிந்து போகும் பிரச்சனையும் இதன் மூலமாக சரி செய்யப்படுகிறது. தினமும் மாட்சாவை ஹேர் மாஸ்காகவோ அல்லது எண்ணெயாகவோ பயன்படுத்தி வந்தால் நல்ல தடிமனான, வலிமையான முடியை பெறலாம். 

தலைமுடி உதிர்வு 

தலையணை, ஆடைகள் என்று எங்கு பார்த்தாலும் தலைமுடியாக இருக்கிறதா? அப்படி என்றால் நீங்கள் மிக தீவிரமான தலைமுடி பிரச்சனையை அனுபவித்து வருகிறீர்கள் என்று அர்த்தம். வலுவிழுந்த தலைமுடி மிக எளிதாக கொட்டிவிடும். எனவே உங்களுடைய தலைமுடிக்கு வலு சேர்ப்பதற்கு நீங்கள் மாட்சாவை பயன்படுத்தலாம். இது சேதமடைந்த தலைமுடியை சரிசெய்து முடி உடைந்து போகாமல் பார்த்துக் கொள்கிறது. மாட்சாவில் காணப்படும் முக்கியமான வைட்டமின்களான வைட்டமின் C மற்றும் வைட்டமின் E ஆகிய இரண்டும் ஆரோக்கியமான தலைமுடிக்கு அவசியமான கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. 

பொடுகு பிரச்சனை மற்றும் வறண்ட மயிர்க்கால்கள் 

பொடுகு, அரிப்பு அல்லது வறண்ட மயிர்க்கால்கள் உங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறதா? அப்படி என்றால் உங்களுக்கான ஒரு பொருள்தான் மாட்சா. நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் உங்களுக்கு நிச்சயமாக உதவும். மாட்சாவில் காணப்படும் கேட்டசின்கள் எரிச்சலை குறைத்து, சிவத்தலைப் போக்கி, மயிர்க்கால்களை சமநிலையாக்குகிறது. மாட்சாவில் உள்ள இயற்கையான பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகு காரணமான ஈஸ்டை எதிர்த்து போராடுகிறது. எனவே உங்களுடைய அன்றாட தலைமுடி பராமரிப்பு வழக்கத்தில் மாட்சாவை சேர்த்து வர பொடுகு பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். 

மேலும் படிக்க: செம்பருத்தி பூ தேநீர்: அழகும் ஆரோக்கியமும் ஒரே இடத்தில்!!!

நச்சு நீக்கம்

நச்சு நீக்க வழக்கம் என்று வரும்பொழுது பெரும்பாலான நேரத்தில் நமது மயிர்க்கால்களை நாம் மறந்து விடுகிறோம். ஆனால் மயிர்க்கால்களில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் நச்சுக்கள் சேர்ந்து இருக்கலாம். இதற்கு மாட்சா பயன்படுத்துவது உதவும். ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் உள்ள மாட்சா இயற்கையான டீடாக்சிஃபையராக செயல்படுகிறது. தலைமுடியில் உள்ள அழுக்கு மற்றும் அடைப்பட்ட துளைகளை சரி செய்து தலைமுடிக்கு ஃபிரஷ்ஷான மற்றும் சுத்தமான ஒரு சூழலை அமைத்துக் கொடுக்கிறது. அடிக்கடி உங்களுடைய மயிர் கால்களை மாட்சா பயன்படுத்தி நச்சு நீக்கம் செய்து வந்தால் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான தலைமுடியை பெறலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 407

    0

    0