விஜய் கட்சியில் இணையும் முன்னாள் ஐஏஎஸ்? புதிய சர்கார் அமைக்குமா தமிழக வெற்றிக் கழகம்?!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2024, 1:35 pm

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் நடிகர் விஜய், ஆரம்பத்தில் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அரசியலுக்குள் நுழைய உள்ளதாக கூறப்பட்டு வந்தது, அதற்கு ஏற்றாற்போல அவருடைய விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்யிட்டு சில கணிசமான இடங்களையும் கைப்பற்றியது.

பின்னர் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, பரிசுகளை வாரி வழங்கினார்.

2 வருடமாக விஜய் இதை செய்து வரும் நிலையில், இளைஞர்களின் ஓட்டுக்காக அவர் குறி வைப்பது ஊர்ஜிதமானது. பின்னர் தமிழக வெற்றிக் கழகம் என தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.

கொடி, சின்னம் என அறிவித்த அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும், அனைத்திலும் வெற்றி வாகை சூடி தற்போது முதல் மாநாட்டுக்கான தேதியும் அறிவித்து அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் முதல் மாநாட்டில் பல அரசியல் கட்சிகளில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி தவெகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

அந்தவகைசயில் ஏற்கனவே அரசியலுக்கு வர நினைத்த முன்னாள் ஐஏஎஸ் சகாயம் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சி தொடங்கும் எண்ணத்துடன் களமிறங்கிய சகாயம் பின்னால் இளைஞர்கள் படையெடுத்தனர்.

ஆனால் ஓட்டுக்கு காசு கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளதால் தன்னால் தற்போது அரசியலுக்குள் நுழைய முடியாது என நழுவிவிட்டார். இந்த நிலையில் தவெகவில் அவர் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

வலைப்பேச்சு அந்தணன் கூட சமீபத்தில் ஐஏஎஸ் சகாயம் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. தற்போது அது உண்மை என நம்பத் தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றனர், மேலும் மாநாட்டில் பங்கேற்க சகாயம் வருகை தர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சகாயம் ஐஏஎஸ் மீது நற்பெயர் மக்களுக்கு உண்டு. நேர்மைக்கு பெயர் போன சகாயத்தை மிஸ்டர் கிளீன் என கூறுவதும் உண்டு. விஜய்யின் ஸ்மார்ட் மூவ் குறித்து அரசியலில் பலத்த எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. மாநாட்டில் விஜய் என்ன பேசப் போகிறார் என்ற ஆவர்வத்தையும் தூண்டி உள்ளது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 351

    0

    0