வீட்டுக்குள் வெடித்த நாட்டு வெடி… அரை கிலோ மீட்டர் தூரம் சிதறிய உடல்… 9 மாத குழந்தையுடன் 3 பேர் பலி!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2024, 4:35 pm

திருப்பூரில் வீட்டில் நாட்டு வெடி தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 மாத குழந்தை உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள பொன்னம்மாள் வீதியில் கார்த்திக் என்பவரது வீட்டில் திருவிழாவுக்கான பட்டாசுகள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட போது இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது.

கார்த்திக், சத்திய பிரியா தம்பதியினர் வசித்து வரும் இந்த வீட்டில் இவர்களது உறவினர் சரவணகுமார் சொந்தமான பட்டாசு கடைக்கு தேவையான திருவிழா பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

மேலும் சரவணகுமார் பட்டாசு தயாரிப்புக்கான உரிமத்தை ஈரோட்டில் பெற்றிருப்பதாகவும் ஆனால் சட்ட விதிமிறைகளுக்கு புறம்பாக வீட்டில் வைத்து தயாரித்ததால் விபரீதம் ஏற்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டில் ஏற்பட்ட விபத்தில் காரணமாக அருகில் இருந்து 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது எனவே அதனை ஆய்வு செய்து அதற்கான நிவாரணம் வழங்கும் பணியை மேற்கொண்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

மேலும் வெளி தயாரிப்பில் ஈடுபட்டது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். வலி விபத்தின் போது அருகில் இருந்தவர்கள் பலத்த சத்தம் கேட்டதாகவும் ஒரு உடல் சிதறி அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வீசி எறியப்பட்டதாகவும் தெரிவித்த அவர்கள், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தங்களுக்கு தெரியவில்லை என தெரிவித்தனர்

மேலும் பட்டாசு தயாரிப்பு ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவலை திரட்டும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

இதுபரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி குமார் என்பவரும் மற்றும் 9 மாத குழந்தை ஆலிய செர்ரின் என்பதும் உடல் சிதறி இறந்த பெண் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 221

    0

    0