மசாஜ் சென்டரில் மஜா… களைகட்டிய விபச்சாரம் : சத்தமே இல்லாமல் நுழைந்தே காக்கிச் சட்டை!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2024, 6:38 pm

மசாஜ் சென்டர் என்ற பெரியல் விபச்சார தொழில் களைகட்டிய நிலையயில் போலீசார் 3 அழகிகளுடன் 9 பேரை கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக திருச்சி எஸ்பி தனிபடை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் எஸ்பிஐ தனிபடை காவல்துறையினர் அதிரடியாக அந்த மசாஜ் சென்டரில் சோதனை செய்த பொழுது 3 பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் 6 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 9 பேரை எஸ்பிஐ தனிப்படையினர் கைது செய்தனர்.பின்னர் அவர்களை திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் காவல்துறையினர், திருவெறும்பூர் தாசில்தார் ஜெயப்பிரகாசம் முன்னிலையில் அந்த மசாஜ் சென்டருக்கு சீல் வைத்தனர்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக அந்த கட்டிடத்தின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் ஒரு கட்டிடத்தில் சினிமா துணை நடிகைகள் மற்றும் சில நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவெறும்பூர் பகுதியில் உள்ள பொது துறையை நிறுவனங்களில் வேலை பார்க்கும் பல ஊழியர்கள் தங்களது சேமிப்பு கணக்கை இழந்தார்கள் என்பது அப்போதைய வரலாறு.

அது தற்பொழுது இந்தப் பகுதியில் மீண்டும் இதுபோன்று விபச்சார வழக்கில் மூன்று அழகிகள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!