கொலையில் முடிந்த இறுதிச்சடங்கு… இருதரப்புக்கு இடையே நிகழ்ந்த மோதல் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2024, 8:05 pm

இறுதிச்சடங்களில் இருதரப்புக்கு ஏற்பட்ட மோதலில் முதியவரை கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி, 70 வயதான இவர் இயற்கை மரணம் அடைந்த நிலையில், அவரது உடலை இடுகாட்டிற்கு எடுத்து செல்வதற்கு முன்பு அவரது உறவினர்கள் நீர்மலைக்கு செம்புதண்ணீர் எடுக்க சென்றுள்ளனர்.

அப்போது, நீர்மலைக்கு செல்லும் இடத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு தரப்பினருக்கும், உயிரிழந்த சமுத்திரபாண்டியின் உறவினர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் வேலுச்சாமி (வயது 60) என்பவர் தலையில் ஒருவர் கட்டையால் தாக்குதல் நடத்தவே காயமடைந்த அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீசார் 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருதரப்பினருக்கும் இடையே மேலும் பிரச்சினை ஏற்படாத வகையில் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

  • Sobhana’s missed roles in Tamil cinema நல்ல சான்ஸ்-ஆ மிஸ் பண்ணிட்டேன்…கரகாட்டக்காரன் படத்தில் நடிக்க இருந்த பிரபல மலையாள நடிகை புலம்பல்..!
  • Views: - 619

    0

    0