2 மனைவிகள் இருந்தும் பத்தாது… 14 வயது சிறுமியை 3வதாக திருமணம் செய்த ‘கல்யாண ராமன்’ : குமரியில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2024, 10:23 am

2 மனைவிகள் இருந்தும் 14 வயது சிறுமியை 3வது திருமணம் செய்த காமுகனை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி. இந்த சிறுமியை பறக்கை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி நீலகண்டன்(36) என்பவர் (ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளது) மூன்றாவது திருமணம் செய்துள்ளதாக ராஜாக்கமங்கம் ஊராட்சி சமூக நலவிரிவாக்கத்துறை அலுவலர் அற்புதமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையும் படியுங்க: கொலையில் முடிந்த இறுதிச்சடங்கு… இருதரப்புக்கு இடையே நிகழ்ந்த மோதல் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு!

இதனை தொடர்ந்து அவர் இது குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் நிலைய காவல்துறையினருக்கு அதிகாரி தகவல் கொடுத்தார்.பின்னர் காவல்துறை உதவியோடு சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு மாலையும், தாலியுமாக நின்ற சிறுமியை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.

உடனடியாக சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமியை மூன்றாம் திருமணம் செய்த நீலகண்டனை அனைத்து மகளீர் காவல்துறையினர் கைது செய்தார்கள்.இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Sobhana’s missed roles in Tamil cinema நல்ல சான்ஸ்-ஆ மிஸ் பண்ணிட்டேன்…கரகாட்டக்காரன் படத்தில் நடிக்க இருந்த பிரபல மலையாள நடிகை புலம்பல்..!
  • Views: - 618

    0

    0