நள்ளிரவில் வீடு புகுந்து தூக்கிய போலீசார்.. சாம்சங் ஊழியர்கள் அதிர்ச்சி : போராட்டத்தை தடுக்க முயற்சி?!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2024, 11:40 am

காஞ்சிபுரத்தில் சாம்சங் ஊழியர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைளை வைத்து கடந்த 9ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Samsung Employees Protest

சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு சாம்சங் ஊழியர்களுக்கு இன்று ஆதரவு தெரிவிக்க வருகை தர உள்ளனர்.

இதனிடையே நேற்று நள்ளிரவு சாம்சங் ஊழியர்களை வீடு புகுந்து போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அனைவரையும் பிணையில் விடுவித்துள்ளனர்.

இதையும் படியுங்க: 2 மனைவிகள் இருந்தும் பத்தாது… 14 வயது சிறுமியை 3வதாக திருமணம் செய்த ‘கல்யாண ராமன்’ : குமரியில் ஷாக்!

எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர், அவர்கள் எங்கு தங்க வைக்கப்பட்டுள்னர் என்ற விபரங்களை வெளியிட ண்டும் என சக ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதே சமயம் நேற்று நள்ளிரவு போராட்டத்துக்காக அமைக்கப்பட்ட பந்தல்களும் கலைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிபிஎம் தலைவர் கனகராஜ், தனது எக்ஸ் தள பக்கத்தில் சாம்சங் தொழிலாளர்கள் சங்கத் தலைவர்களை நள்ளிரவில் கைது செய்தது ஏன்? அப்படி என்ன நடந்துவிட்டது, எமர்ஜென்சியா? முன்னெப்போதும் இல்லாத வகையில் சோதனை என குறிப்பிட்டுள்ளார்.

  • Pushpa 2 Beat Bahubali வசூலில் பாகுபலியை மிஞ்சிய புஷ்பா 2 : பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகும் அல்லு அர்ஜூன்!
  • Views: - 183

    0

    0