வயிற்று உப்புசத்தோடு போராடி கலைத்து விட்டீர்களா… உங்களுக்கான சில சிம்பிள் ஹோம் ரெமெடீஸ்!!!

Author: Hemalatha Ramkumar
9 அக்டோபர் 2024, 12:38 மணி
Quick Share

வயிறு நிரம்பி இருப்பது, இறுக்கம் அல்லது அடிவயிற்றில் வீக்கம் ஆகியவை வயிற்று உப்புசம் என்று அழைக்கப்படுகிறது. அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள், கார்பனேற்றப்பட்ட பானங்கள், பீன்ஸ் மற்றும் ப்ராக்கோலி போன்ற காய்கறிகள், மற்றும் சாப்பிடும் பொழுது காற்றை விழுங்குதல் அல்லது தண்ணீரை வேகமாக குடித்தல் போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஹார்மோன் மாற்றங்கள், மோசமான குடல் ஆரோக்கியம் மற்றும் குடலில் உள்ள பாக்டீரியாக்கள் சமநிலை இல்லாமல் இருப்பது போன்றவை காரணமாகவும் இது ஏற்படலாம். இது ஒருவருக்கு அசௌகரியத்தை கொடுக்க கூடும். எனவே வயிற்று உப்புசத்தில் இருந்து தப்பிப்பதற்கு நாம் என்னென்ன மாதிரியான வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம் என்பதை பார்க்கலாம். 

இஞ்சி டீ

இஞ்சியில் செரிமான பலன்கள் இருப்பது பெரும்பாலானோருக்கு தெரியும். இஞ்சியானது செரிமானத்தைத் தூண்டி, இரைப்பையில் எரிச்சல் ஏற்படுவதை தடுக்கிறது. உங்களுக்கு வயிற்று உப்புசம் இருந்தால் அதனை குறைப்பதற்கு நீங்கள் நிச்சயமாக இஞ்சி டீயை முயற்சி செய்து பார்க்கலாம். 

புதினா டீ 

இஞ்சி டீ போலவே புதினா டீயும் வயிற்று உப்புசத்தை குறைப்பதற்கு வேலை செய்கிறது. தசைகளை ஆற்றும் பண்புகள் இருப்பதால் இது வயிற்று உப்புசத்தில் இருந்து நிவாரணம் தருகிறது. செரிமான பாதையில் உள்ள தசைகளை ரிலாக்ஸ் செய்து வாயு மிக எளிதாக கடந்து செல்வதற்கு உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆற்றும் பண்பு செரிமானத்தால் ஏற்படும் அசௌகரியத்தை போக்கி செரிமான ஆரோக்கியத்தை சிறந்த முறையில் மேம்படுத்துகிறது.  

மேலும் படிக்க: கருவளையத்த போக்கி உங்களுக்கு யங் லுக் கொடுக்கும் மஞ்சள் ஐ மாஸ்க்!!!

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரில் செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகள் அதிக அளவில் உள்ளது. வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து உணவுக்கு முன்பு குடிப்பது உங்களுடைய செரிமானம் சிறந்த முறையில் நடைபெறுவதற்கு உதவும். இதன் மூலமாக வயிற்று உப்புசம் தடுக்கப்படுகிறது. 

சோம்பு 

வயிற்று உப்புசத்தை குறைக்கும் பண்புகள் சோம்பில் அதிகமாக காணப்படுகிறது. சோம்பை வெறுமனே வாயில் போட்டு மெல்லுவதாலோ அல்லது சோம்பு கஷாயம் செய்து குடித்தாலோ இரைப்பை குடலில் உள்ள தசைகள் ஓய்வு பெற்று, வாயு மற்றும் வயிற்று உப்புசம் குறையும். 

வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு 

வெதுவெதுப்பான தண்ணீரோடு எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது செரிமானத்தை அதிகப்படுத்தி, வயிற்று உப்புசத்தை குறைக்கும். எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலத்தன்மை வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் உணவு சிறந்த முறையில் உடைந்து செரிமானம் விரிவாக நடைபெறும். 

வாழைப்பழம் 

Health Tips

வாழைப்பழத்தில் பொட்டாசியம் என்ற மினரல் அதிகமாக இருப்பதால் இது நமது உடலில் உள்ள சோடியம் அளவுகளை சரியான முறையில் பராமரிக்கிறது. அதிக சோடியம் அளவுகள் காரணமாக வயிற்று உப்புசம் ஏற்படலாம். எனவே வயிற்று உப்புசத்தை குறைப்பதற்கு நீங்கள் வாழைப்பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது. 

பொறுமையாக சாப்பிடவும்

நீங்கள் பொறுமையாக சாப்பிட்டால் காற்றை விழுங்குவதை தவிர்க்கலாம். உணவை வாயில் போட்டு நன்றாக மென்று கூழாக்கி பொறுமையாக விழுங்கவும். இவ்வாறு செய்யும் பொழுது உங்களுடைய செரிமான அமைப்பு சீராக இயங்கும். மேலும் அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. 

தண்ணீர் 

உங்களுடைய செரிமானம் சிறந்த முறையில் நடைபெறுவதற்கு போதுமான அளவு தண்ணீர் இருப்பது அவசியம். அதிகப்படியான சோடியம் உடலில் உடலில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு தண்ணீர் உதவுகிறது. மேலும் உங்கள் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தால் அது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • இனி விமர்சனம் அதிகமாகும்.. விஜய் கடிதம்
  • Views: - 127

    0

    0